‘மகாராஜா’ படத்தின் இயக்குனருக்கு அடிச்ச பம்பர் ஆஃபர்.. இதுதான் உண்மையான வெற்றி
கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம்:
விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் மகாராஜா. படம் பெரிய அளவில் அனைவரின் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கூகுளில் கூட 2024 ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட படங்களில் மகாராஜா திரைப்படம் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்தது. சீனாவிலும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
சர்வதேச சந்தைகளில் தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் இந்த படம் தமிழ் சினிமாவின் பெருமையை எடுத்துக்காட்டி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இயக்குனரான நித்திலன் சுவாமிநாதனுக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கி அவரை கௌரவப்படுத்தி இருக்கிறார்.
200 கோடியை நெருங்கும் மகாராஜா:
இந்த சொகுசு காரின் விலை சுமார் 80 லட்சம் என சொல்லப்படுகிறது. அந்த ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஜூன் மாத தொடக்கத்தில் இந்த படம் 110 கோடி அளவில் வசூலிக்க சீனாவில் வெளியான பிறகு 80 கோடிக்கு மேல் வசூலித்தது. மேலும் படத்தின் ஒட்டுமொத்த வசூல் 190 கோடியை எட்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இனி வரும் காலங்களில் 200 கோடி வசூலை மகாராஜா திரைப்படம் நெருங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல மகாராஜா திரைப்படம் சீனாவில் வெளியாகி மூன்றாவது வாரத்திலும் அங்கு உள்ள மார்க்கெட்டில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதன்மூலம் சீனாவில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக மகாராஜா திரைப்படம் திகழ்கிறது.
இதற்கு முன் ரஜினியின் கபாலி ,சிவகார்த்திகேயனின் கனா, விஜயின் மெர்சல் ஆகிய படங்கள் முன்னிலையில் இருந்தன. இப்போது அந்த படங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு மகாராஜா திரைப்படம் முதல் இடத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் விஜய் சேதுபதியின் நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. பிரபல ஹிந்தி நடிகரும் இயக்குனருமான அனுராக் காஷ்யப் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களுடன் சேர்ந்து சிங்கம்புலி, அபிராமி, நட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க லோக்நாத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.