அப்பாவாகும் நடிகர் மஹத் - அவர் வெளியிட்ட போட்டோவ பாருங்க!..
Mon, 1 Feb 2021

திரைத்துறையில் சென்னை 28 -2, மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மகத். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இவர் தனது நீண்ட நாள் காதலி பிராச்சி மிஸ்ராவை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். இந்த திருமணத்தில் நடிகர் சிம்பு கூட கலந்து கொண்டார்.
இந்நிலையில், மிஸ்ரா தற்போது கர்ப்பமாக உள்ளார். வருகிற மே மாதம் அவர்களுக்கு குழந்தை பிறக்கவுள்ளது. மனைவி மிஸ்ராவின் வயிற்றில் முத்தமிடும் புகைப்படத்தை பகிர்ந்து மகத் இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பிரபலங்கள் பலரும் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.