Categories: Cinema News latest news

நண்பன் படத்திற்கு No சொன்ன மகேஷ்பாபு… காரணத்தை கேட்டா ஷாக் ஆவிங்க!….

தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த சில திரைப்படங்களை ரீமேக் செய்து நடித்துள்ளார் நடிகர் விஜய். தரணி இயக்கத்தில் அவர் நடித்து தமிழில் வசூலை வாரிக்குவித்த ‘கில்லி’ படம் கூட மகேஷ்பாபு நடித்த ‘ஒக்கடு’ படம்தான்.

அதேபோல், விஜய் நடித்த போக்கிரி படமும் மகேஷ்பாபுவின் தெலுங்கு படம்தான். மகேஷ்பாபுவின் உடல் மொழியை விஜய் அப்படியே காப்பி அடிக்கிறார் என பலரும் கிண்டலடிக்க ஒரு கட்டத்தில் மகேஷ்பாபுவின் ரீமேக் படங்களில் நடிப்பதை நிறுத்தினார் விஜய்.

ஆனாலும் அவர் நடிக்கும் படங்களுடன் மகேஷ்பாபு ஏதோ ஒரு வகையில் தொடர்பு உடையவராக தொடர்ந்து வருகிறார். பீஸ்ட் படத்திற்கு பின் இயக்குனர் வம்சி இயக்கவுள்ள புதிய படத்தின் கதை கூட முதலில் மகேஷ்பாபுவிடம்தான் கூறப்பட்டது.

இது போன்ற கதைகளில் நான் ஏற்கனவே நடித்துவிட்டேன் எனக்கூறி அந்த கதையை ரிஜெக்ட் செய்துள்ளார். அதன்பின்னரே வம்சி – விஜய் சந்திப்பு நடந்து தற்போது அப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

vijay-

தற்போது ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான நண்பன் படத்திலும் முதலில் நடிக்கவிருந்தது மகேஷ்பாபுதான் என்பது தெரியவந்துள்ளது. நண்பன் படத்தில் மகேஷ்பாபு நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால், அப்படத்திலிருந்து மகேஷ்பாபு விலகவே பின்னர் ஷங்கர் இயக்க விஜய் நடித்தார்.

மகேஷ்பாபு ஏன் விலகினார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. நண்பன் படத்தில் நடிக்க மறுத்துவிட்டு ‘தூக்குடு’ என்கிற படத்தில் நடித்தார் மகேஷ்பாபு. இப்படத்தின் கதையை மகேஷ்பாபுவிடம் கூறிய அப்படத்தின் இயக்குனர் சீனு வைட்லா அப்படத்தில் உள்ள சில பஞ்ச் வசனங்களை கூற, அது மகேஷ்பாபு மிகவும் பிடித்துவிட அப்படத்தில் நடிப்பதற்காகவே மகேஷ்பாபு நண்பன் படத்தில் நடிக்க மறுத்துள்ளார். இந்த தகவலை சீனு வைட்லா தற்போது தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர்கள் பஞ்ச் வசனங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதற்கு இதுவே சாட்சி…

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா