மகேஷ் பாபு நடிப்பில் இந்த சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ம் தேதி குண்டூர் காரம் திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு அம்மாவாக ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.
இருவருக்கும் இடையே உள்ள பாசப் போராட்டம் தான் படத்தின் கதையே. அப்படி இருக்கும் நிலையில், ஏற்கனவே இருவரும் சரி குத்தாட்டம் போட்ட பாடலை எல்லாம் பார்த்த தெலுங்கு ரசிகர்கள் அதை கனெக்ட் செய்துக் கொள்ளவே முடியவில்லை என கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் போல சிங்கராக மாறிய சந்தானம்!.. வாய்ஸ் சகிக்கல என கலாய்க்கும் நெட்டிசன்கள்!..
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ஸ்ரீலீலா, மீனாக்ஷி செளத்ரி, ரம்யா கிருஷ்ணன், ஜெயராம் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் குண்டூர் காரம் படத்தில் நடித்துள்ளனர். டைட்டிலில் மட்டும் தான் காரம் இருக்கிறது என்றும் படம் சப்புன்னு இருக்கிறது என ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை அந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுத்து விட்டனர்.
வசூலிலும் இளம் நடிகர் தேஜா சஜ்ஜாவின் ஹனுமான் படத்திற்கு முன்னதாக மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் எடுபடவில்லை.
இதையும் படிங்க: அஜித்தை தப்பா பேசாதீங்க!.. விஜயகாந்த் நினைவேந்தலுக்கு வராததற்கு இதுதான் காரணமா?.. பிரபலம் பதில்!
சிம்புவுடன் போட்டுத் தாக்கு பாடலுக்கு ஆடியதை போல அப்பவே மகேஷ் பாபு படத்தில் அவருடன் இணைந்து செம ஐட்டம் டான்ஸை ஆடியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இப்போ அம்மாவாக அவர் நடித்து வந்தாலும் ரசிகர்கள் அந்த பாடல் தான் ஞாபகத்துக்கு வருது என மகேஷ் பாபு படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.
கோலிவுட்டில் முக்கிய…
Idli kadai:…
தனுஷ் இயக்கத்தில்…
Nayanthara: கடந்த…
TVK Vijay:…