Categories: Cinema News latest news

பள்ளிக்கூடத்துக்கு போகிற பெண்ணை மீண்டும் ஹீரோயினாக்கி விட்டுடீங்களே.?! லாரன்ஸ் மீது கோபத்தில் ரசிகர்கள்…

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி 2 பாகம் உருவாகிறது.

இந்த இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கவுள்ளதாகவும் முன்னதாக அறிவிப்பு வெளியானது.

இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடிப்பது யார் என்ற கேள்வி.? ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு த்ரிஷா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்ததாக தகவல்கள் வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னெவென்றால், லட்சுமி மேனன் இந்தப் படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

இதையும் படியுங்களேன்- எனக்கு நெஞ்சில் பிரச்சனை இருந்தது உண்மை தான்… ஆனால்.? மேடையில் உளறிய சியான் விக்ரம்…

இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2016-ஆம் ஆண்டு வெளியான “றெக்க” படத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட 5 வருடம் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அதன்பிறகு 2021-ஆம் ஆண்டு வெளியான “புலிக்குத்தி பாண்டி” படத்தில் நடித்து ரீ-என்டரி கொடுத்தார்.

இவர் பள்ளிக்கூடம் படிக்கும் போது தான் கும்கி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் படைப்பை நிறுத்திவிட்டு கும்கி படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தார். ஆனால், மீண்டும் படிப்பில் ஆர்வம் காட்டிய லட்சுமி மேனனை சந்திரமுகி 2-வில் நடிக்க லாரன்ஸ் அவரை தேர்வு செய்துள்ளதால் ரசிகர்கள் செம கடுப்பில் இருக்கிறார்கள்.

Manikandan
Published by
Manikandan