×

தோனிக்காக ஜிவா செய்த காரியம்... நீங்களும் பாருங்க

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சமீபத்திய விளம்பரம் செம ஹிட் அடித்து வருகிறது.
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பல்வேறு விளம்பரங்களில் நடித்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டாலும், ஐபிஎல் தொடரில் இன்னும் சில ஆண்டுகள் அவர் விளையாடத் திட்டமிட்டிருக்கிறார். பல உள்நாட்டு, வெளிநாட்டுத் தயாரிப்புகளுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் தோனி இருந்து வருகிறார். 

`தல’ தோனியைப் போலவே அவரது செல்ல மகள் ஜிவாவுக்கு ஆன்லைனில் பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. ஜிவாவுக்கென இன்ஸ்டாவில் ரசிகர் பட்டாளமே உண்டு. தந்தையுடன் சேர்ந்தும், சில சமயங்களில் தனியாகவும் ஜிவா செய்யும் குறும்புகளை தோனி, அவ்வப்போது இன்ஸ்டாவில் பகிர்வதுண்டு. அந்த வீடியோ, போட்டோக்கள் லைக்ஸை வாரிக் குவிக்கும். 

இருவரும் இன்ஸ்டாவில் குறும்பு செய்துவந்தாலும் ஒன்றாக இணைந்து விளம்பரப் படங்களில் இதுவரை நடித்ததில்லை. முதல்முறையாக பார்லேவின் ஓரியோ நிறுவன விளம்பரத்தில் தோனியும், ஜிவாவும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அன்பானவர்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள் என்ற தீமுடன் வெளியாகியிருக்கும் அந்த விளம்பரம் சோசியல் மீடியாக்களில் சென்சேஷனல் ஹிட்டடித்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மாவுக்கான உணவை நாமே தயாரித்துக் கொடுப்போம் உள்ளிட்ட தோனி - ஜிவாவின் டயலாக்குகளுக்கும் ரசிகர்கள் ஹார்ட்டின் விட்டு வருகிறார்கள். 

From around the web

Trending Videos

Tamilnadu News