×

விஜய் பட வாய்ப்பை இழந்த மகிழ் திருமேனி… உதயநிதி செய்த ச்சீப்பான செயல்!

இயக்குனர் மகிழ் திருமேனியிடம் விஜய் கதைக் கேட்டு ஓகே பண்ணிய நேரத்தில் அந்த படத்தை எடுக்க விடாமல் நடிகர் உதயநிதி ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

 

இயக்குனர் மகிழ் திருமேனியிடம் விஜய் கதைக் கேட்டு ஓகே பண்ணிய நேரத்தில் அந்த படத்தை எடுக்க விடாமல் நடிகர் உதயநிதி ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

இயக்குனர் மகிழ் திருமேனி வரிசையாக நல்ல படங்களை இயக்கி வருபவர். அவர் கடைசியாக இயக்கிய தடம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அருண் விஜய்யை முன்னணி கதாநாயகனாக மாற்றியுள்ளது. இந்நிலையில் அவரை அழைத்த விஜய் கதைக் கேட்டுள்ளார். விஜய்க்கு 3 கதைகளை சொல்லியுள்ளார் மகிழ். அதில் ஒரு கதையை தேர்ந்தெடுத்து விஜய் ஓகே சொல்ல அதைப் படமாக்கும் முனைப்பில் இருந்துள்ளார் மகிழ்.

ஆனால் அந்த நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் எப்போதோ மகிழ் திருமேனிக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்த நிலையில் என் படத்தை முடித்துவிட்டுதான் விஜய் படத்துக்கு செல்லவேண்டும் என கூறிவிட்டாராம். அதனால் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போயுள்ளது. அதன் பின்னர்தான் விஜய் லோகேஷ் கனகராஜ் கதையைக் கேட்டு மாஸ்டர் படத்தில் விஜய் நடித்துள்ளாராம். ஆனால் உதயநிதி ஸ்டாலினோ இப்போது வரை மகிழ் திருமேனியின் படத்தை எடுக்கவே இல்லையாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News