×

மாளவிகா மாளவிகா மனம் பறித்தாள் மாளவிகா...

 
mal

மாளவிகா இந்திய திரைப்பட நடிகை. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார். மாளவிகா 19.7.1979ல் பெங்களூருவில் பிறந்தார். 

ஸ்வேதா கோனூர் என்ற இயற்பெயரைக் கொண்ட மாளவிகா எண்ட் லவ்லீ மாடல் அழகியாக இருந்து திரைப்பட நடிகை ஆனவர். இவர்  சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான உன்னை தேடி திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் அஜீத்குமார் ஜோடியாக வந்து ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தார். உதட்டிலிருந்து பிரியும் லேசான புன்சிரிப்பும், காந்தக் கண்களும் சற்றேறக்குறைய நடிகை ரோஜாவின் சாயலில் வந்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தார். ஏனோ தெரியவில்லை. அவரது படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் முதல் படத்திலேயே தனது நடிப்புத் திறனை வெளிக்காட்டியிருப்பார். சித்திரம் பேசுதடி படத்தில் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலில் பட்டையை கிளப்பியிருப்பார்.

2002-2003ல் இவர் நடித்த தமிழ்த்திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை. அதனால் தெலுங்கு பக்கம் சென்றார். 2004ம் ஆண்டு சூர்யா நடித்த பேரழகன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். மறுபடியும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தார். தொடர்ந்து பாலிவுட்டுக்குச் சென்றார். அங்கு சீ யூ எட் 9 என்ற படத்தில் நடித்தார். பின்னர் ரோஜாவனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டு பயலே ஆகிய படங்களில் நடித்தார். 

ml

2007ல் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தையும், ஒரு பெண்குழந்தையும் உள்ளனர். இல்வாழ்க்கைக்குப் பின்னர் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

ஐயா, உன்னை தேடி, ஆனந்த பூங்காற்றே, வெற்றி கொடி கட்டு, வசூல் ராஜா எம்பிபிஎஸ், சித்திரம் பேசுதடி, வியாபாரி, மச்சக்காரன் அற்புத தீவு, நான் அவன் இல்லை, மாயகண்ணாடி, மணிகண்டா, சபரி, திருமகன், குருவி, ஆயுதம் செய்வோம், காதல் இது காதல், யுத்ரா, மாஸ்டர், அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  கடைசியாக 2009ல் ஆயுதம் செய்வோம், அறுபடை ஆகிய படங்களில் நடித்தார்.

இவர் நடித்துள்ள படங்களில் சிலவற்றைக் காணலாம். 

உன்னைத் தேடி 

ut


1999ல் சுந்தர் சி.இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மாளவிகா அறிமுகமானார். முதல் படத்திலேயே அஜீத்குமாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிவகுமார், மௌலி, ஸ்ரீவித்யா, விவேக், வையாபுரி, கரண், வாசு, ராஜீவ், ராதாகிருஷ்ணன், மனோரமா, வினுச்சக்கரவர்த்தி, சங்கர் மற்றும் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், ஜி.வேணுகோபால் ஆகியோர் சேர்ந்து தயாரித்தனர். தேவாவின் இசைமழையில் பாடல்கள் அனைத்தும் தேன்ரகம். 

காற்றாக வருவாயா, மாளவிகா, நாளை காலை நேரில், நீதானா நீதானா, போறாளே, ஒயிலா ஒயிலா ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. 


வெற்றிக்கொடி கட்டு 

2000ல் வெளிவந்த வெற்றித் திரைப்படம். சேரன் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக முரளி மற்றும் பார்த்திபனும், கதாநாயகிகளாக மீனா மற்றும் மாளவிகாவும் நடித்திருந்தனர். தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் சக்கைபோடு போட்டன. வடிவேலு, மனோரமா, கோவை சரளா, சார்லி, தாமு ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் சிரிப்பு வருது, தில்லாலே தில்லாலே, வள்ளி வள்ளி, கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு, லட்சம் லட்சமா ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் மாளவிகா நடித்த கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கௌப்பியது. 

சந்திரமுகி 

2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் சந்திரமுகி. இப்படத்தில் நயன்தாரா, ஜோதிகா, வடிவேல், பிரபு ஆகியோருடன் மாளவிகா பிரியா விசுவநாதன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். வித்யாசாகரின் இசையில் பாடல்கள் மெகா ஹிட். இப்படம் 1999ல் வெளியான படையப்பா வசூலை முறியடித்தது. தேவுடா, தேவுடா, கொக்கு பற பற , அத்திந்தோம் திந்தியும், கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், ராரா சரசகு ராரா, அண்ணணோட பாட்டு ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.  

வியாபாரி 

vvv

சக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் எஸ்;.ஸே.சூர்யா, தமன்னா, பிரகாஷ் ராஜ், நமிதா, மாளவிகா, வடிவேலு ஆகியோர் நடித்த படம் வியாபாரி. இது மல்டிபிலிசிட்டி என்னும் ஆங்கில திரைப்படத்தின் தழுவல். படத்தில் தேவாவின் இசையில் ஆசைப்பட்ட எல்லாத்தையும், ஜூலை மாதத்தில், கடி கடி, தா, தா, வெற்றி கண்டவன் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 

வசூல் ராஜா எம்பிபிஎஸ் 

2004ல் வெளிவந்த இப்படத்தை சரண் இயக்கினார். கமல்ஹாசன், சினேகா, பிரபு, பிரகாஷ்ராஜ், நாகேஷ், மாளவிகா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தி திரைப்படமான முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தின் ரீமேக் படம். பரத்வாஜ் இசையில்  காடு திறந்தே, கலக்கப்போவது யாரு, லவ் பண்ணுடா, பத்துக்குள்ளே நம்பர், சகலகலா டாக்டர், சீனா தானா ஆகிய பாடல்கள் பிரபலமாகின. 

vvv

மாளவிகாவுக்கு நம்ம டீம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News