தனது தாயுடன் கேக் வெட்டி கொண்டாடிய மாளவிகா மோகனன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனனின் மகளான மாளவிகா மோகனன் கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான Pattam Pole திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்த அவர், 2019-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன், அதன் பிறகு விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் ', தனுஷுடன் 'மாறன் , விக்ரமுடன் தங்கலான் போன்ற முக்கிய படங்களில் நடித்தார். குறிப்பாக மாஸ்டர் திரைப்படம் அவருக்கு தமிழில் அவரை அடையாளப்படுத்தியது. தற்போது கார்த்தியுடன் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மாளவிகா மோகனன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். தந்து தாயுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பல்ராலும் பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
