×

ஹாட் பிராப்பர்ட்டியான மாஸ்டர் நடிகை... அதிகரிக்கும் மவுசால் மகிழ்ச்சி 

மாஸ்டர் படத்தின் சக்ஸஸால் அடுத்தடுத்தப் பட வாய்ப்புகள் பெருகி வருவதால் மாளவிகா மோகனன் மகிழ்ச்சியில் திளைக்கிறாராம். 
 
 

கிளாமர் மட்டுமல்லாது தனது நடிப்பாலுல் ரசிகர்களிடம் லைக்ஸ் அள்ளி வருபவர் மாளவிகா மோகனன். மாஸ்டர் படத்தில் இவரது அழுத்தமான நடிப்பு தனி ரசிகர்கள் பட்டாளத்தையே இவருக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. அத்தோடு, மாஸ்டரின் பெருவெற்றி மாளவிகாவுக்கு வாய்ப்புகளையும் அள்ளித் தந்திருக்கிறது. 

அஜித் மற்றும் விக்ரம் என முன்னணி ஹீரோக்கள் அடுத்து நடிக்க இருக்கும் படங்களில் ஒப்பந்தம் செய்ய மாளவிகாவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதேபோல், இளம் நடிகர்கள் பலரும் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை மாளவிகாவுடன் நடிக்க வேண்டும் என இயக்குனர், தயாரிப்பாளர்களிடம் ஆசையை வெளிப்படுத்தி வருகிறார்களாம். 


கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் மாளவிகாவை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். போல்டான பல கதாபாத்திரங்களை முயற்சி செய்யும் மாளவிகா மோகனன், நடிகர் ஃபர்ஹான் அக்தர் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இப்படி தொடர் வாய்ப்புகளால் அம்மணி செம ஹேப்பியாம்...

From around the web

Trending Videos

Tamilnadu News