1. Home
  2. Latest News

விஜய்னா மாஸு.. ரஜினினா தூஸா? நடிகை பேட்டியால் பரபரப்பான அரங்கம்

rajinivijay
விஜய் என்ற பெயரை சொன்னதும் அந்த அரங்கமே அதிர்ந்தது. கைதட்டல்கள் எழுந்தன

என்னதான் ரஜினி, கமல், விஜய், அஜித் என தொழில் முனையில் போட்டி இருந்தாலும் பர்சனலாகவே சமீபகாலமாக ரஜினியையும் விஜயையும் ஒப்பிட்டு அவரவர் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டையிட்டு வருகின்றனர். அது இப்போதைக்கு கொஞ்சம் குறைவாக இருந்தாலும் உள்ளுக்குள் விஜய் ரசிகர்களுக்கும் சரி ரஜினி ரசிகர்களுக்கும் சரி அந்த மோதல் இருந்து கொண்டே இருக்கின்றன. இது இப்பொழுது ஆரம்பித்தது அல்ல. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பில் இருந்தே ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே உள்ளுக்குள் மோதல்கள் இருந்து தான் வந்தன.

அதுவும் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அது கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஏனெனில் அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என ரஜினி ஆரம்பத்தில் சொல்லி வந்த நிலையில் அந்த முடிவிலிருந்து பின் வாங்கினார். ஆனால் விஜய் சொன்ன நேரத்தில் உடனே அரசியலுக்கு வந்து விட்டார். இதையும் ஒப்பிட்டு ரஜினியை விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இப்படி சின்ன சின்ன சண்டைகள் சமூக வலைதளங்களில் உலாவி வருகின்றது.

இந்த நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் நடிகை மாளவிகா மோகனன் நடிகர்களுடனான தன்னுடைய முதல் சந்திப்பை பற்றி விவரித்து இருக்கிறார். அவருடைய தந்தை சினிமாவில் ஒரு ஒளிப்பதிவாளர். மாளவிகா மோகனனை பொறுத்த வரைக்கும் எல்லா மொழிகளிலும் இருக்கும் பெரிய பெரிய நடிகர்களுடன் நடித்தவர். அந்த வகையில் அவர்களுடனான முதல் சந்திப்பை பற்றி மாளவிகா மோகனன் பேசியிருக்கிறார்.

அவருடைய அப்பாவுடன் படப்பிடிப்பிற்கு சிறுவயதில் செல்லும் பொழுது ஷாருக்கானை முதன்முறையாக மாளவிகா மோகனன் பார்த்தாராம். இவர்களை பார்த்ததும் ஷாருக்கான் வரவேற்று இருக்கிறார். ஆனால் ஷாருக்கானின் வருகையால் தான் பிரமித்து போனதாகவும் உறைந்து விட்டதாகவும் தெரிவித்தார் மாளவிகா மோகனன். ஷாருக்கான் மாளவிகா மோகனன் அருகில் வரும்பொழுது அந்த பிரமிப்பில் இருந்து அவர் மீள முடியாமல் எழுந்து நிற்கவில்லையாம்.

ஷாருக்கான் போன பிறகு இவருடைய பெற்றோர் மாளவிகா மோகனனை திட்டி இருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஷாருக்கானை பார்த்து தன் மனதையே பறிகொடுத்து விட்டதாக மாளவிகா மோகனன் பேசி இருக்கிறார். அதேபோல மாஸ்டர் படப்பிடிப்பிற்கு முன்பு விஜய்யுடனான தனது முதல் சந்திப்பையும் அவர் விவரித்து இருக்கிறார். விஜய் என்ற பெயரை சொன்னதும் அந்த அரங்கமே அதிர்ந்தது. கைதட்டல்கள் எழுந்தன.

malavika

அந்த தருணத்தை சர்ரியல் என்று விவரித்து இருக்கிறார் மாளவிகா மோகனன். அவருடைய வசீகரமான அந்த தோற்றம் என்னை ஆர்வப்படுத்தியது என்று பேசி இருக்கிறார். அதேபோல் ரஜினிகாந்துடனான தனது ஆரம்பகால தொடர்புகளையும் விவரித்து இருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் பெயர் சொன்னதும் அரங்கம் கப்சிப் என்று ஆனது. உடனே அவரைப் பேட்டி எடுத்த அந்த நிருபர் இவருக்கு applause-ஏ இல்லையே என்று கேட்டார். அதற்கு மாளவிகா புன்னகையுடன் அதை கடந்து விட்டார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.