×

’நயனுக்கு மேக்கப் அறிவே இல்லை’- மாளவிகா... சூப்பர் ஸ்டாரை சீண்டாதமா!

நடிகை மாளவிகாவின் சமீபத்திய ஒரு பேட்டி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
 

தமிழின் முன்னணி நடிகையாக `லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் வலம்வருபவர் நடிகை நயன்தாரா. கமர்ஷியல் ஹீரோயினாக கோலிவுட்டில் நுழைந்த நயன், ஒரு பாடலுக்கு நடனம், ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் என பத்து வருடங்களாகப் பல பரிமாணம் காட்டியிருக்கிறார். வரிசையாகப் படங்கள் கையிலிருக்கும் நிலையில், முன்னணி ஹீரோக்களும் அவருடன் ஜோடிபோடக் காத்திருக்கிறார்கள். 

இந்தசூழலில் `மாஸ்டர்’ நாயகி மாளவிகா மேனன் நயனைப் பற்றி பெயர் குறிப்பிடாமல் கவுன்டர் கொடுத்த வீடியோ ஒன்று வைரலாகப் பரவி வருகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆங்கர், `தமிழ் படங்களின் வேடிக்கையான லாஜிக் பற்றி சொல்லுங்கள்’ என்று மாளவிகா மேனனிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். 

அந்தக் கேள்விக்கு, ``ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் நடிகை ஒருவரை அப்படிப் பார்த்திருக்கிறேன். மருத்துவமனையில் மிகவும் சீரியஸாக சாகக் கிடக்கிறார். அப்படிப்பட்ட சூழலிலும் ஃபுல் மேக்கப்பில் இருக்கிறார். ஐ லைனர், ஹேர் டூ என அனைத்து மேக்கப்பையும் செய்திருக்கிறார். நான் யோசித்தேன், அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலும் எப்படி இதுபோன்று இருக்க முடியும் என்று. சாகக்கிடக்கும் நிலையிலும் லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு தான் அழகாகத் தெரிய வேண்டும் என்று நினைக்கிறார்கள். என்னதான் அது ஒரு கமர்ஷியல் படமென்றாலும் கொஞ்சமாவது யதார்த்தமாக இருக்க வேண்டும்’’ என்று கமெண்ட் அடித்திருந்தார். 

அட்லி இயக்கத்தில் ஆர்யா ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த ராஜா ராணி படத்தையே மாளவிகா குறிப்பிட்டதாக ரசிகர்கள் கமெண்டி வருகிறார்கள். 

From around the web

Trending Videos

Tamilnadu News