Categories: Cinema News latest news throwback stories

மலையாளத்தில் மாஸ் ஹிட் கொடுத்த கமலின் வயநாடு தம்பன் உருவானது எப்படி? சுவாரசியமான தகவல்கள்

கமலும், ஜெயராமும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அவருடைய அனுபவங்கள் குறித்து ஜெயராம் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா…

சாருக்கு ஒரு 16 வயசு இருக்கும். அப்போ கன்னியாகுமரி படம் பண்ணது…ஐ.வி.சசி, சேதுமாதவன்னு பெரிய பெரிய டைரக்டர் கூட சார் சேர்ந்து கமல் சார் படம் பண்ணிருக்காரு. நிறைய நிறைய ஆல்மோஸ்ட் 50 படங்கள் அன்னைக்கு பிளாக் அண்ட் ஒயிட் இருக்கும்போதே மலையாளத்துல பண்ணிட்டாரு.

Vayanadu Thamban

எல்லாமே இப்பவும் அப்டு டேட்டா இருக்கு. வின்சன்ட்னு பெரிய கேமரா மேன். அவரு கூட சார் பண்ண படம் வயநாடன் தம்பன். அது வந்து நான் ஸ்கூல்ல படிக்கும்போது பார்த்த படம். அன்னைக்கு வந்து இன்னைக்கு உள்ள டெக்னாலஜி எல்லாம் ஒண்ணுமே இல்லாம அவரு வந்து 100 வயசுக்கு மேல ஏஜ்ல அப்படியே நடிச்சிருப்பாரு.

ஒரு குறை சொல்லாம…த்ரில்லரான படம். அந்த சமயத்துல நான் 10 தடவை பார்த்துருப்பேன். இன்னைக்கு உள்ள டெக்னாலஜியை வச்சி அந்தப் படத்தை ரீமேக் பண்ணினா ரொம்ப நல்லாருக்கும்னு எங்கிட்ட சார் அடிக்கடி சொல்வாரு.

கமல் இந்தப்படத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் மைடியர் குட்டிச்சாத்தான் 3டியை இயக்கியவர் எனக்கு நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். இதுல வின்சன்ட் சார் பெரிய டெக்னீஷியன். ஸ்ரீதர் சாரோட வலது கை.

VT2

கண் என்று சொன்னால் மிகையாகாது. அவரும் பிரபல எழுத்தாளர் வி.டி.நந்தகுமாரும் 21 வயது கமலிடம் பழகிய விதம்…அவர்கள் என்னிடம் காட்டிய அன்பு…அவர்கள் அருகில் அமர இருக்கை…இன்னிக்கி 21 வயசு பையன்கிட்ட நான் அப்படி பழகுவேனான்னு சொன்னா அது டவுட் புல். கொஞ்சம் யோசிப்பேன்.

சின்ன பையன்கிட்ட போயி இதெல்லாம் எப்படி சொல்றதுன்னு? அப்போ அவங்க பேசிக்கிட்டாங்க. ஒரு ஸ்டோரி பண்ணலாம்னு இருக்கோம்…இதுல நீயும் கலந்துக்கிறீயான்னாங்க. அப்போ நிறைய படம் பண்ணிக்கிட்டு இருந்தேன்.

கேரளால நாளைக்கு சூட்டிங்…டிரெய்ன்ல போகணும்னு சொன்னேன். நானும் வாரேன என அவங்களும் சேர்ந்து ட்ரெயின்ல ஏறிக்கிட்டாங்க. அப்போ பேசுன விஷயங்களை மறக்கவே முடியாது. ஒரு ஹாரர் மூவி பண்ணனும்.

Vayanadu Thamban3

தமிழ்ல ரோமியோ ஜூலியட் இல்லேங்கறதுக்காக மறைமலை அடிகள் வந்து அம்பிகாவதி அமராவதி பண்ணின மாதிரி ஒரு காவியத்தை உருவாக்கினார். கிரைம் திரில்லர் பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா படம் மாதிரி ஒண்ணு பண்ணனும்னு சொன்னாங்க.

அப்போ நான் வந்து திடீர்னு ரைடர் ஹேக்கோட ஷி மாதிரி பண்ணனும்னு சொன்னேன். அந்த மாதிரி புத்தகங்களை நான் படித்திருப்பேன்னு அவர்கள் நினைக்கல. ரொம்ப அட்வான்ஸ்டுன்னு சொன்னாங்க.

அதுல இருந்து இன்ஸ்பயராகி உருவானது தான் இந்த வயநாடு தம்பன். அதுல டிராகுலாவோட சரித்திரத்தைப் பற்றி நான் சொல்ல ஆரம்பித்த போது பரவாயில்லையே இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமான்னு கேட்டாரு வி.டி.நந்தகுமார். நான் பேசியதெல்லாம் வின்சென்ட் மாஸ்டருக்கும் பிடித்திருந்தது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v