Connect with us

Cinema News

மாட்டுனா கூட ஹீரோக்கள் திருந்த மாட்டாங்க!.. அட்ஜெஸ்ட்மென்ட் அசிங்கம்.. குட்டி பத்மினி ஓப்பன் பேட்டி!..

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை சர்வ சாதரணமாக பல ஹீரோக்களும், இயக்குனர்களும் தொடர்ந்து செய்துக் கொண்டு தான் வருகின்றனர் என்றும் பெண்கள் தான் இந்த ஆணாதிக்க சமூகத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கு ஓகே சொல்லும் பெண்கள் இஷ்டப்படி இருக்கலாம் என்றும் குட்டி பத்மினி தனது சமீபத்திய பேட்டியில் பேசி ஷாக்கை கிளப்புகிறார்.

நடிகர்கள் குறித்து ஏதாவது விஷயம் லீக் ஆனாலும், அவர்களை அது எந்த வகையிலும் பாதிக்காது என்றும் அதன் பிறகு கூட அவர்கள் அதிலிருந்து திருந்து அந்த விவகாரங்களில் ஈடுபடாமல் இருக்க மாட்டார்கள் என்றும் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேர் உடன் அதே வேளையை அசால்ட்டாக செய்வார்கள் என குட்டி பத்மினி குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிரிப்பே வரல சந்தானம்.. சாவு வீட்ல டாவு கேட்குதா?.. 80ஸ் பில்டப் விமர்சனம் இதோ!..

எத்தனையோ நடிகர்களின் பெயர்கள் பாலியல் துன்புறுத்தல் சர்ச்சைகளில் சிக்கினாலும் அவர்கள் அதனை எளிதாக கடந்து சென்று விடுகின்றனர். ஆனால், பாதிக்கப்படுவது ஹீரோயின்கள் தான். வெளிப்படையாக பேசவே நடிகைகள் தயக்கம் காட்டுவது அதற்குத்தான். சினிமாவில் இருந்தே இல்லாமல் பல நடிகைகளை பல நடிகர்கள் தூக்கி அடித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலி கான் பேசியது முற்றிலும் தவறு தான் என்றும் ஆனால், அவர் தவறாக நினைத்து பேசவில்லை என்றாலும் அவரது மனதில் இருந்த வக்கிரம் வெளிப்பட்டது தான் பிரச்சனை ஆகி உள்ளது என்றார்.

இதையும் படிங்க: ஆளப்போறான் தமிழன் மகனுக்கு தமிழ் தெரியாதா?!.. விஜய் மகனால் விழி பிதுங்கும் லைக்கா..

ஆனால், நடிகர் ரஜினிகாந்த் தமன்னா உடன் நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லையே என பேசியதும், விஜய் அனுஷ்கா குறித்து பேசியது எல்லாம் ஆபாச பேச்சாக வராது என்றும் அவர்கள் கண்ணியத்துடன் தான் பேசியுள்ளனர் என்றும் குட்டி பத்மினி விளக்கம் கொடுத்துள்ளார்.

விசித்ரா – பாலகிருஷ்ணன் விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு விசித்ரா அந்த நடிகரின் பெயரை சொல்லி இருக்க மாட்டாரே என்றும் கேள்வி எழுப்பி நடிகைகள் சினிமாவில் இருக்க வேண்டும் என்றால் சிலவற்றை மறைத்தும் மறந்தும் தான் இருக்க வேண்டும் என பேசியுள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top