Connect with us

Cinema News

மலையாளத்தில் கிழட்டு நடிகர்கள் செஞ்சதுதான் அராஜகமே… வெளுத்து வாங்கும் பிரபலம்

Malayalam: மலையாள சினிமா உலகம் இந்த வருட தொடக்கத்தில் இருந்து உச்சத்தில் இருந்து நிலையில் சமீப காலமாக அதன் குட்டு வெளிப்பட்டு ரசிகர்களிடம் அசிங்கப்பட்டு நிற்கும் நிலை உருவாகி இருக்கிறது.

இது குறித்து பிரபல திரை விமர்சகர் அந்தணன் தெரிவிக்கும் போது, மலையாள நடிகைகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை கசிந்த நிலையில் மலையாள திரை உலகமே ஆடிப் போயிருக்கிறது. அம்மா என அழைக்கப்படும் மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

இதையும் படிங்க: அந்த மேட்டரில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த மோகன்லால்.. அன்றே கணித்த ஷாரூக்கான்!..

இந்த அறிக்கையில் முக்கிய குற்றவாளிகளாக மோகன்லால், சித்திக் ஆகியோர் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் நடிகர் சித்திக் மீது தற்போது வழக்கும் பதியப்பட இருக்கிறதாம். இவர் மீது மட்டும் 17க்கும் அதிகமான நடிகைகள் புகார் அளித்துள்ளனர். கதை சொல்கிறேன் என அழைத்து அவர் செய்த அராஜகங்கள் தான் அதிகமாம். நடிகைகள் இமெயில் மூலம் புகார் சொல்லியுள்ளனர். தற்போது இது வைரலாகி இருக்கிறது.

ஹேமா கமிட்டி பல வருடங்களுக்கு முன்னரே உருவாக்கப்பட்டது. இதில் இள நடிகர்களான டோவினோ தாமஸ், ஃபகத பாசில் உள்ளிட்ட நடிகர்கள் யாரும் இல்லை. இவர்கள் சினிமாவை கண்ணியமாக கையாளுகின்றனர். ஆனால் கிழட்டு நடிகர்களான மூத்த நடிகர்களின் ஆட்டம் தான் அதிகமாகி இருக்கிறது.

இதையும் படிங்க: கோட் படத்துல விஜயகாந்த் வர்ற சீன் அப்படி இருக்குமாமே..! அவரே சொல்லிட்டாரே..!

மேற்குவங்க நடிகையின் புகாரால்தான் இந்த பிரச்சினை முதலில் புதைந்தது. பினராய் விஜயன் இதை சரியாக கையாண்டாலும் அவருக்கு இதில் நெருக்கடி தான் அதிகம். ஏனெனில் இந்த பிரச்சினையில் அவரின் நெருங்கிய நண்பர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் சிக்கி உள்ளனர்.

Mohanlal

மோகன்லால் ஒருமுறை நண்பர்களை அழைத்து பார்ட்டி வைத்திருக்கிறார்.  பிறந்த நாள் கூட இல்லையே எதற்கு இந்த விழா என கேட்டபோது, நான் அதில் ஆயிரத்தை தாண்டி விட்டேன் என பெருமையாக கூறிக் கொண்டாராம். அந்த விழாவிலேயே அவருக்கு பெண் வடிவ கேக் வைக்கப்பட்டது தான் உச்சபட்ச அதிர்ச்சி எனவும் கூறப்படுகிறது.

இப்படி கொடூர முகம் கொண்டவர் தான் மோகன்லால். இப்படி முன்னணி நடிகர்களின் கோரமுகம் வெளியாக காரணமாக இருந்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிடவேப்படவில்லை. கசிந்ததற்கு இப்படி புயல் அடித்து வரும் நிலையில் வெளியிடப்பட்டால் நிறைய பேரின் பொய் முகம் உடைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top