×

தனுஷிடம் வாய்ப்பு கேட்ட மாளவிகா மோகனன் - ரெண்டே நாளில் அடித்த ஜாக்பாட்!

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்திலே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது.

 

அந்த நிரூபிக்கும் வகையில் மாளவிகா மோகனன் விஜய்யை அடித்து நடிகர் தனுஷிற்கு ஜோடியாக அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் இந்த வாய்ப்பு அவருக்கு எப்படி கிடைத்தது என்பதில் சுவாரஸ்யமே... ஆம், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிறந்தநாள் கொணடிய தனுஷிற்கு வாழ்த்து கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.

அந்த பதிவில், “பிறந்தநாள் வாழ்த்துகள் தனுஷ். வரும் வருடம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கட்டும். உங்களுடன் நடிக்க உற்சாகமாக இருக்கிறேன். யாராவது நம் இருவரையும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க வைப்பார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” பதிவிட்டிருந்தார்.

அவரின் இந்த பதிவிற்கு ரிப்ளை செய்த நடிகர் தனுஷ்,  "நன்றி... விரைவில் நடக்கும் என நினைக்கிறேன்" என்று கூறியிருந்தார். அவர் கூறிய இரண்டே நாளில் மாளவிகா மோகனனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. ஆம், தனுஷின் 'D43'படத்தில் மாளவிகா மோகனனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குவது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News