விஜய்க்கு மட்டுமல்ல!.. மமிதா பைஜுவுக்கும் இன்னைக்குத்தான் பர்த்டே!..
இளம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை மமிதா பைஜூ இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவர் நடித்து வரும் "பெத்லேஹம் குடும்ப யூனிட்" படக்குழு, மமிதாவின் கியூட்டான மற்றும் கலகலப்பான தருணங்களை உள்ளடக்கிய சிறப்பு வீடியோ கிளிப்பிங்ஸை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
மலையாள திரையுலகில் இருந்து தமிழ் ரசிகர்களின் மனதிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள மமிதா பைஜூ, குறுகிய காலத்திலேயே தென்னிந்திய சினிமாவின் மிகவும் கவனிக்கப்படும் இளம் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார். அவரது இயல்பான நடிப்பு, துடிப்பான நடனம் மற்றும் தோற்றம் காரணமாக பல முன்னணி இயக்குநர்களின் தேர்வாகவும் இருந்து வருகிறார்.
Happy Birthday Mamitha ❣️🎂@_mamithabaiju ✨#BethlehemKudumbaUnit #BKU #MamithaBaiju #NivinPauly #OnamRelease pic.twitter.com/Q9ZpK9NLfG
— Bhavana Studios (@BhavanaStudios) June 22, 2026
தற்போது மமிதா பைஜூவின் கைவசம் பல முக்கியமான திரைப்படங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று "பெத்லேஹம் குடும்ப யூனிட்". படக்குழுவினர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வீடியோ, படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. அதேபோல், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள "விஷ்வநாந்த் அண்ட் சன்ஸ்" திரைப்படத்திலும் மமிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதற்கிடையில், தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமான "ஜனநாயகன்" திரைப்படத்திலும் மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக கூறப்படும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மமிதாவின் கதாபாத்திரமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒரே நேரத்தில் தமிழ், மற்றும் மலையாள மொழிகளில் கவனம் செலுத்தி வரும் மமிதா பைஜூவுக்கு இந்த பிறந்தநாள் மிகவும் சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது. தொடர்ந்து பெரிய படங்களில் நடித்து வரும் அவர், அடுத்த கட்டத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்வார் என்ற நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
