உங்க காட்ல ஒரே மழை தான்... மமிதா பைஜூவின் அடுத்த ஹீரோ - யார் தெரியுமா?
நடிகை மமிதா பைஜூ:
கேரளாவை சேர்ந்த இளம் நடிகையான மமிதா பைஜூ தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு கட்டி வளம் வந்து கொண்டிருக்கிறார். 2017 ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் நடிக்க ஆரம்பித்த இவர் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.

மேலும், இவர் தமிழ் சினிமாவில் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகி இருந்தார். தொடர்ந்து தனுஷ் ,சூர்யா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிரதீப் ரங்கநாதனுடைய dude திரைப்படத்தில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார் .
திரைப்படங்கள்:
அதன் பிறகு சூர்யாவுடன் இணைந்து விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான நடிகையாக இருந்து வருபவர்தான் மமிதா பைஜூ .
இவரது நடிப்பில் தற்போது அடுத்த படம் உருவாக இருக்கிறதாம். பிரபல இசை அமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக அறிமுகமாகும் எல்லம்மா என்கிற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மைதா பைஜூ நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் - மமிதா ஜோடி:
வேணு எல் தண்டி இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் மமிதா பைஜூவின் ஜோடியை திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள் . தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களில் நடித்து வருவதோடு தொடர்ந்து புது படங்களில் கமிட் ஆகும் மமிதா பைஜூவின் காட்டில் ஒரே மழை தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
