ஏப்ரல் இல்லை... ஆகஸ்ட் 14! - விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விழாவில் மமிதா பைஜுவை கலாய்த்த டிடி... வைரலான தருணம்!

 
vas

கோவையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர் சூர்யா, நடிகை மமிதா பைஜு, இயக்குநர் வெங்கி அட்லூரி, படக்குழுவினர் மற்றும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், மமிதா பைஜு பேசிய வார்த்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

மேடையில் பேசிய மமிதா பைஜு, இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு  நன்றி தெரிவித்தார். "வெங்கி சார் என்னை இவ்வளவு அழகாக வழிநடத்தியதற்கு மிக்க நன்றி. இந்தக் கதாபாத்திரத்திற்கு நான் முழுமையாக முயச்சித்துள்ளேன் என்று நம்புகிறேன். உங்களுடன் மீண்டும் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்," என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தொடர்ந்து நடிகர் சூர்யாவைப் பற்றி பேசும்போது, "சூர்யா சாருடன் பணியாற்றியது ஒரு அற்புதமான அனுபவம். நீங்கள் எங்களெல்லோருக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, மிகவும் அன்பான மற்றும் அற்புதமான இணை நடிகர். உங்களுடன் நடித்தது என் திரைப்பயணத்தில் மறக்க முடியாத தருணமாக இருக்கும்," என்று பாராட்டினார்.

அதியடுத்து, "இந்தப் படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது. அனைவரும் கண்டிப்பாக பாருங்கள்," என்று தவறுதலாகக் கூறிவிட்டார். உடனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் டிடி சிரித்தபடியே, "ஏப்ரல் இல்லை மமிதா, ஆகஸ்ட் 14!" என்று திருத்திக் கூறினார். தனது தவறை உணர்ந்த மமிதா பைஜு, சிரித்தபடியே "ஆமாம்... ஆகஸ்ட் 14-ம் தேதி. அனைவரும் திரையரங்குகளில் வந்து ஆதரவு அளிக்க வேண்டும்," என்று கூறினார்.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளதுடன், மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் இந்த ஆண்டின் முக்கிய குடும்ப பொழுதுபோக்கு படங்களில் ஒன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகிலும் ரசிகர்களிடமும் அதிகரித்துள்ளது.

Tags

From Around the web