ஒண்ணும் தெரியாது!.. விஜய்யின் அரசியல் குறித்த கேள்விக்கு.. ஒரே போடாக போட்ட மம்மூக்கா!..

 
ஒண்ணும் தெரியாது!.. விஜய்யின் அரசியல் குறித்த கேள்விக்கு.. ஒரே போடாக போட்ட மம்மூக்கா!..

நடிகர் விஜய் அரசியலில் நுழைந்தது தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. விஜயின் அரசியல் குறித்து பலரும் பல விதமாக தங்களது கருத்துக்களை முன் வைத்த நிலையில் தற்போது மலையாள நடிகர் மம்மூட்டியிடம் மைக்கை நீட்டி கேள்விக் கேட்க அவர் சொன்ன வார்த்தை வைரலாகி வருகிறது.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக கட்சி தனியாக போட்டியிட்டது. கடைசி வரை கூட்டணிக்கு முயன்றும் யாரும் வரவில்லை. திமுக பல கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வைத்திருந்தது. ஆனாலும், அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி திமுக மற்றும் அதிமுக என்ற பாரம்பரிய போட்டிக்கு மூன்றாவது பெரிய போட்டியாக மாறியது. இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களிடையே விஜய்க்கு அதிக ஆதரவு காணப்பட்ட நிலையில் அவரது ரசிகர் மன்றம் அரசியல் அமைப்பாக மாறி வலுவான அடிப்படை உருவாக்கியுள்ளது.

தேர்தலுக்குப் பிறகு, இது ஆரம்பமே என்று தெரிவித்துள்ள விஜய் உண்மையில் ஆட்சியை பிடிப்பாரா அல்லது கிங்மேக்கராக இருப்பாரா? என்பது வரும் தேர்தல் முடிவுகளால் தான் தெளிவாகும்.

இந்நிலையில், தனுஷ் படத்தில் நடித்து வரும் மம்மூட்டி படப்பிடிப்பு வேலைக்காக சென்னை வந்திருந்த நிலையில், செய்தியாளர்கள், தமிழக தேர்தல் சூழல், கேரள அரசியல் நிலைமை மற்றும் விஜயின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுப்பினர். இதற்கு பதிலளித்த மம்மூட்டி, “ஒண்ணும் தெரியாது” என்று சுருக்கமாக கூறி, சிரித்தபடியே அங்கிருந்து விலகினார்.

அவரின் இந்த குறுகிய பதில் எந்தவித அரசியல் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தாததாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் பல்வேறு விளக்கங்களுடன் பரவி வருகிறது. சிலர் இதை நேரடியாக கருத்து தெரிவிக்காமல் நுணுக்கமாகத் தவிர்த்த பதிலாகக் கருத, மற்றவர்கள் விஜயின் அரசியல் குறித்து கருத்து சொல்ல விரும்பாத அணுகுமுறையாகவும் பார்க்கின்றனர். விஜய்க்கு ஒண்ணும் தெரியாது என மம்மூட்டி கூறிவிட்டார் என்றும் திமுகவினர் கிளப்பி வருகின்றனர்.

From Around the web