திரையில் முதலமைச்சர் ஆகுறது பெருசு இல்லை!.. மம்மூட்டி என்ன திடீரென இப்படி சொல்லிட்டாரு!..

 
mamooty

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி, தனது நகைச்சுவை கலந்த யதார்த்தமான பதிலால் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் அவர் பேசிய கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

73 வயதிலும் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வரும் மம்மூட்டி, தற்போது பல முக்கிய திரைப்படங்களில் பிஸியாக உள்ளார். சமீபத்தில் வெளியான அவரது படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், புதிய படங்களுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் தொகுப்பாளருமான ரமேஷ் பிஷாரடி, மம்மூட்டி தனது திரைப்பயணத்தில் பலமுறை முதலமைச்சர் கதாபாத்திரங்களில் நடித்திருப்பதை பெருமையாக குறிப்பிட்டார். இதற்கு உடனடியாக பதிலளித்த மம்முட்டி, தனது வழக்கமான பாணியில் அனைவரையும் சிந்திக்க வைத்தார்.

"திரையில் முதலமைச்சராக நடிப்பது பெரிய விஷயம் அல்ல. அதை யார் வேண்டுமானாலும் செய்துவிடலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒரு சாதாரண எம்.எல்.ஏவாக செயல்படுவது கூட மிகவும் கடினமான காரியம். மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து, அவர்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவது எளிதான விஷயம் கிடையாது" என்று அவர் கூறினார்.

மம்மூட்டியின் இந்த பதிலுக்கு அரங்கில் இருந்தவர்கள் பலத்த கைதட்டலுடன் வரவேற்பு அளித்தனர். சமூக வலைதளங்களிலும் அவரது கருத்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அரசியல் மற்றும் பொது வாழ்க்கையின் சவால்களை மிக எளிமையாக எடுத்துரைத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

50 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் சாதனை படைத்து வரும் மம்முட்டி, நடிகராக மட்டுமல்லாமல் சமூக மற்றும் வாழ்க்கை சார்ந்த கருத்துக்களை நேர்மையாக வெளிப்படுத்தும் நபராகவும் அறியப்படுகிறார். அதற்கு எடுத்துக்காட்டாகவே தற்போது அவர் கூறிய இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Tags

From Around the web