ஓம் பட போஸ்டரால் அப்செட்டில் மம்முட்டி ஃபேன்ஸ்!.. இதெல்லாம் நியாயமா?

 
mamooty


அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ஓம். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.  வருகிற 20ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

எனவே, இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட இந்த படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய மம்முட்டி ‘இந்த படத்தில் எனக்கு பெரிய வசனம் எதுவுமில்லை. அடியாட்களை ஏவி விடுவதை தவிர எனக்கு எந்த வேலையும் இல்லை.. இதைத்தான் 6 மாதங்களாக செய்து கொண்டிருந்தேன்’ என ஓப்பனாக பேசியிருந்தார்.

ஒருபக்கம், ஓம் படத்தின் போஸ்டரில் மம்முட்டியின் புகைப்படம் இல்லை. எல்லா போஸ்டரிலும் தனுஷ் மட்டுமே இருக்கிறார். மம்முட்டி எவ்வளவு பெரிய நடிகர்?. விஜயின் மாஸ்டர் போஸ்டரில் விஜய் சேதுபதி இருந்தார்.. அதேபோல், ஜில்லா பட போஸ்டரில் மோகன்லாலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.. ஆனால், ஓம் பட போஸ்டரில் மம்முட்டி இல்லாதது அவரின் ரசிகர்களை அப்செட் ஆக்கியிருக்கிறது.

Murugan ..
Murugan ..

5164 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web