×

பிரபல நடிகையைத் திருமணம் செய்தேன் என சொன்னவர் கைது – திரையுலகில் பரபரப்பு!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான லாவண்யா திரிபாதி தன்னை திருமணம் செய்துகொண்டு மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாக கூறிய நபர் சைபர் கிரைம் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான லாவண்யா திரிபாதி தன்னை திருமணம் செய்துகொண்டு மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாக கூறிய நபர் சைபர் கிரைம் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கு யூ-ட்யூப்பில் பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் நடிகர் சுனிஷித். இவர் சமீபத்தில் சில இணையதள சேனல்களுக்கு அளித்த பேட்டிகள் மிகவும் சர்ச்சையைக் கிளப்பும் விதமாக அமைந்தன. அதில் ஒன்றாக தமிழில் பிரம்மன் மற்றும் மாயவன் ஆகிய படங்களில் நடித்த நடிகை லாவண்யா திரிபாதியை திருமணம் செய்துகொண்டதாகவும், தன் மூலம் மூன்றுமுறை கர்ப்பமாகி அதைக் கருக்கலைப்பு செய்ததாகவும் தெரிவித்து அதிர்ச்சிகளை கிளப்பினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த லாவண்யா, சுனிஷித் மீது சைபர் கிரைம் போலீஸாரிடம் புகாரளித்தார். அந்த புகாரை அடுத்து இன்று சுனிஷித் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News