×

குழந்தைகள் ஆபாச படம் விற்ற இருவர் கைது – பிரவ்சிங் செண்டர் பெயரில் பித்தலாட்டம் !

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதியில் குழந்தைகள் ஆபாசப்படம் விற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதியில் குழந்தைகள் ஆபாசப்படம் விற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக காவல்துறை கடந்த சில மாதங்களாக குழந்தைகள் சம்மந்தப்பட்ட ஆபாசப்படங்களைப் பார்ப்பவர்கள் மற்றும் பரப்புவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே இந்த குற்றத்தின் கீழ் 4க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரவுசிங் செண்டரில் இதுபோல ஆபாசப்படங்கள் கல்லூரி மாணவர்களுக்கு விற்கப்படுவதாக போலிஸாருக்குத் தகவல் வர அங்கு சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு வேலை செய்த வழிவிட்டா கிழவன் மற்றும் பொன்னிருள் ஆகியோர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News