×

பல பெண்களை மயக்கிய நாகர்கோவில் காதல் மன்னன் கைது!

கடந்த ஆண்டு பொள்ளாச்சியில் நடந்தேறிய கொடூர பாலியல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. பொள்ளாச்சியில் இளம் பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்தும், ஆபாசமாக படம் எடுத்தும் வன்கொடுமை மிரட்டி பணம் பறித்து வந்த கும்பல் பிடிபட்டது. 

 

இந்த நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தைபோன்றே பல்வேறு பெண்களைஆபாசமாக படமெடுத்து அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து லட்சக்கணக்கான பணத்தை பறித்ததாக நாகர்கோவிலில் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதாகி இருக்கிறார்.

நாகர்கோயில் மாவட்டம் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி இவரது மகன் காசி என்னும் சுஜி என்ற 26 வயது நிரம்பிய இளைஞர் தான் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார். பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் இவர் தற்போது கைது செய்ய பட்டார். 

இந்நிலையில் பல பெண்களும் இவர் பேரில் தற்போது புகார் அளித்து வருகின்றனர். அதிலும் பல பணக்கார பெண்களை தொடர்பு கொள்ளவும் இவர் முயற்சித்து உள்ளார்.

இந்நிலையில் பிரபல பாடகியான சின்மயி இந்த கைதுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பெண்ணிய பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் அவர் இந்த செய்தியை பதிவிட்டு "முன்பே பல பெண்களும், நானும் கூட இவனைப் பற்றி புகார் எழுப்பினோம். ஒருவழியாக இவன் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறான்" என்று கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News