×

"கொரோனாவை விட மிக கொடூரமானவன் மனிதன்" - பிரபல நடிகர்!

 

மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் ஹேன்ட் சானிடைசர் தீர்ந்துவிட்டதால் அதை வாங்குவதற்காக கடைக்கு போனேன். 60 ருபாய் சானிடைசரை 135 ரூபாய் என்று விலை சொன்னார்கள். அது பற்றி கேட்டதற்கு 'நான் என்ன பண்ணமுடியும். நான் இங்க வேலை தான் பார்க்கிறேன்' என கடையில் இருந்தவர் கூறினார். சரி என வாங்கி வந்துட்டேன்."

"இன்று ஒரு காபி கடைக்கு நண்பர்களுடன் சென்றிருந்தோம். அங்கு கையை சுத்தம் செய்து கொள்ள சானிடைசர் கொடுத்தார்கள். அவர்களும் அதிக விலைக்கு தான் வாங்கி வைத்திருப்பதாக சொன்னார்கள். மற்ற நண்பர்களும் வேறு கடைகளில் அதிக விலைக்கு வாங்கியதாக கூறினார்கள்."
"இந்த மாதிரி அவசரமான சூழ்நிலையில் லாப நோக்கத்திற்காக பயன்படுத்திக்கொள்வது எவ்வளவு கேவலம். கொரோனாவை விட மனிதன் தான் கொடூரமானவன். இந்த மாதிரி நேரங்களில் அதன் விலையை குறைத்து தான் கொடுக்கவேண்டும். காசு இல்லாதவர்கள் எப்படி அதை வாங்குவார்கள் என பால சரவணன் தெரிவித்துள்ளார்."

From around the web

Trending Videos

Tamilnadu News