×

மாஸ் காட்ட மாசாக வருகின்றது மாநாடு பர்ஸ்ட் சிங்கிள் பாடல்...

மாநாடு திரைப்படத்தின் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் மிக விரைவில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
 
maxresdefault (1)

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கும் 'மாநாடு' படத்தை வெளியிடுவதற்கான இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் தள்ளி வைக்கப்பட்ட மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி 'மாநாடு' திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். 

இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அரசியல் மாநாடு ஒன்றில் நடக்கும் அதிரடி திருப்பங்களாக இந்த படம் உருவாகியுள்ளது. 

இந்த திரைப்படத்தில் முதன்முறையாக அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு. படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் 'மாநாடு' திரைப்படத்தின் ரிலீஸிற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் சிம்பு ரசிகர்கள்.

இதனையடுத்து படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், கொரானா பயத்திலும் இருக்கும் இச்சூழலில் இரக்கமற்று மாநாடு படத்தின் சிங்கிளை வெளியிடுவது மனிதமற்ற செயலாக இருக்கும். ஊரடங்கு முடியட்டும் அதுவரை காத்திருங்கள் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் மிக விரைவில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் சிம்பு மற்றும் யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் குஷியில் உள்ளனர். எனவே ‘மாநாடு’ படத்தின் சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News