×

போட்ரா வெடிய... மாநாடு செம அப்டேட்.... அதிகாரபூர்வ தகவல்...

மாநாடு திரைப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் வரும் ஜூன் 21-ஆம் தேதி அன்று ட்விட்டர் ஸ்பேஸில் வெளியிடப்படவுள்ளதாக மாநாடு படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தமது அதிகாரப்பூர்வ பக்கத்தில் அறிவித்துள்ளார். 
 
Maanadu_Silambarasan_150121_1200_DN

சிம்புவுடன் கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், கருணாகரன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரிக்கிறார். முன்னதாக கொரோனா சூழல் தந்த துர் செய்திகளால் இப்படத்தின் பாடல்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை அறிவிப்பதை தள்ளி வைத்திருந்தனர். 

அண்மையில் தான் சிம்புவின் நடிப்பிலான மாநாடு படத்தின் முதல் சிங்கிள் பாடலை யுவன் ஷங்கர் ராஜாவின் U1Records கைப்பற்றியதாகவும், விரைவில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் வரும் ஜூன் 21-ஆம் தேதி அன்று ட்விட்டர் ஸ்பேஸில் வெளியிடப்படவுள்ளதாக மாநாடு படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தமது அதிகாரப்பூர்வ பக்கத்தில் அறிவித்துள்ளார். 

தொடர்ந்து இந்த படத்தின் மற்றைய பாடல்களும், படம் வெளியாகும் தகவல்கள் குறித்த அறிவிப்புகளும் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News