×

மாநாடு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த சூப்பர் அப்டேட்

மாநாடு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
simbu-maanadu

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த புதிய அப்டேட்டை படத்தின் தாயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

சிம்பு ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை விரைவில் வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் தள்ளி வைக்கப்பட்ட மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

மாநாடு திரைப்படத்தில் சிம்பு ஜோடியாக பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். 

இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சிம்பு ரசிகர்கள் மாநாடு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் கேட்டு வந்தனர். அப்போது மாநாடு திரைப்படத்தின் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் மிக விரைவில் வெளியாக இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் மாநாடு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி பற்றிய அறிவிப்பை வரும் புதன்கிழமை, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வெளியிடுவார் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை U1Records நிறுவனம் கைப்பற்றி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News