செப்டம்பர் 10-ஆம் தேதி ரேஸிலிருந்து விலகப்போகிறதா ஒரு படம்?

 
Mandaadi demonte Colony 3 sardar 2

ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு ஜானர்களில் பல படங்கள் ரிலீஸ் ஆன வண்ணம் இருக்கிறது. அப்படி வருகிற செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவித்திருந்தது மூன்று படங்கள்.

நடிகர் கார்த்தி - இயக்குநர் பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'சர்தார் 2'. நடிகர்கள் சூரி - சுஹாஸ் இணைந்து நடித்திருக்கும் 'மண்டாடி'.

நடிகர் அருள்நிதி - இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகியிருக்கும் 'டிமான்ட்டி காலனி 3'. தற்போது, இந்த மூன்று படங்களில் 'சர்தார் 2' மற்றும் 'மண்டாடி' ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டும் அதிக தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதாம்.

இதனால் 'டிமான்ட்டி காலனி 3' படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாரர் ஜானர் படமான இதற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

From Around the web