×

கணவரின் பாடையை தூக்கி இறுதி சடங்கு செய்த நடிகை... கண்கலங்க வைத்த புகைப்படம்...

ராஜ் கௌஷலின் திடீர் மரணத்தால் திரையுலகினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
 
09eda5ae-d46c-4fb7-a43a-e6cecb9434db

Raj Kaushal funeral பிரபல பாலிவுட் நடிகை மந்திரா பேடி தன் கணவர் ராஜ் கௌஷலுக்கு இறுதிச் சடங்கு செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் சிந்தியுள்ளனர்.

நடிகை மந்திரா பேடியின் கணவர் ராஜ் கௌஷல் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் இறுதிச் சடங்கு மும்பையில் நடந்தது.

பிரபல பாலிவுட் நடிகை மந்திரா பேடி இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜ் கௌஷலை கடந்த 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வீர் என்கிற மகனும், தாரா என்கிற மகளும் உள்ளனர். இந்நிலையில் ராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 49. ராஜ் கௌஷலின் இறுதிச் சடங்கு மும்பையில் நடைபெற்றது.

ராஜ் கௌஷலின் இறுதிச் சடங்கில் பாலிவுட் பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டார்கள். மந்திரா பேடி தன் கணவரின் உடல் இருந்த பாடையை தூக்கிச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அதை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் கண் கலங்கினார்கள். தன் கணவருக்கு மந்திரா பேடி தான் இறுசிச் சடங்கு செய்தார்.

இறுதிச் சடங்கின்போதும், அதன் பிறகு அங்கிருந்து கிளம்பியபோதும் மந்திரா பேடி துக்கம் தாங்காமல் கதறி அழுதார். அவரை தோழிகள் ஆறுதல் படுத்தினார்கள். ராஜ் கௌஷலின் திடீர் மரணத்தால் திரையுலகினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். எப்பொழுதும் சிரித்த முகமாக இருந்த ராஜ் தற்போது உயிருடன் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை என்று அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜ் கௌஷல் இல்லாமல் அவரின் பிள்ளைகள் என்ன செய்யப் போகிறார்களோ என்று பலரும் கூறியுள்ளனர். தாராவை கடந்த ஆண்டு தான் தத்தெடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ் கௌஷல் பற்றி நடிகர் மாதவன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இந்த செய்தி எவ்வளவு துக்ககரமானது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தங்க மனசுக்காரர் அவர். சென்று வாருங்கள் என் சகோதரா. நம் உலகம் மிகச் சிறியதாகிவிட்டது என்றார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News