Categories: Cinema News latest news

100 நாட்களுக்கும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளா?? வெறித்தனமாக ஓடிய மணி ரத்னம் படம்… அடேங்கப்பா!!

தமிழின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் மணி ரத்னம், கன்னடத்தில் வெளிவந்த “பல்லவி அணு பல்லவி” என்ற திரைப்படத்தின் மூலம்தான் முதன்முதலில் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மலையாளத்தில் “உணரு” என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இத்திரைப்படங்களை தொடர்ந்துதான் தமிழில் “பகல் நிலவு” என்ற திரைப்படத்தை இயக்கினார் மணி ரத்னம். அதன் பின் “மௌன ராகம்”, “நாயகன்” என பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இவர், “ரோஜா” திரைப்படத்தின் மூலம் இந்திய இயக்குனராக திகழ்ந்தார்.

Mani Ratnam

அதன் பின் இந்திய சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக உருவான மணி ரத்னம், “பம்பாய்”, “உயிரே”, “அலை பாயுதே”, போன்ற வெற்றித் திரைப்படங்களை உருவாக்கினார். மேலும் ஹிந்தியில் “குரு”, “யுவா” போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவ்வாறு இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக திகழும் மணி ரத்னம், சமீபத்தில் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆருக்காக பாலச்சந்தரை கைவிட்ட நாகேஷ்… நண்பர்களுக்குள்ளே வெடித்த வெடிகுண்டு…

Agni Natchathiram

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியம் “கோவை பாபா திரையரங்கில் மணி ரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் திரைப்படம் 100 நாட்கள், 400 ஷோக்களும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடியது. இது போன்ற விஷயங்கள் எல்லாம் இப்போது நடக்காது” என ஒரு ஆச்சரியத்தகவலை பகிர்ந்துள்ளார்.

1988 ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் கார்த்திக், பிரபு, அமலா, நிரோஷா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “அக்னி நட்சத்திரம்”. இத்திரைப்படம் மணி ரத்னம் கேரியரிலேயே முக்கிய வெற்றித்திரைப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Arun Prasad