×

ஓடிடி தளத்தில் வித்தியாசமாக களமிறங்கும் மணிரத்னம் – தொழிலாளர்களுக்கு உதவி!

அமேசான் ப்ரைம் தளத்துக்காக இணையத் தொடர் ஒன்றை உருவாக்க உள்ளதாக மணிரத்னம் தரப்பு தெரிவித்துள்ளது.

 

அமேசான் ப்ரைம் தளத்துக்காக இணையத் தொடர் ஒன்றை உருவாக்க உள்ளதாக மணிரத்னம் தரப்பு தெரிவித்துள்ளது.

மணிரத்னத்தின் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வம் பாகம் ஒன்று கிட்டத்தட்ட பாதி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்த படத்தின் பணிகள் இப்போது பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் குறுகிய காலத்தில் ஒரு படைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதனால் குறைந்த பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

இதற்கிடையில் ஓடிடி தளத்தில் புராணத்தை அடிப்படையாகக் கொண்ட தொடரை உருவாக்க இருக்கிறார். இந்த தொடருக்கு அவர் கிரியேட்டிவ் இயக்குனராக இருக்க, கௌதம் மேனன், அரவிந்த் சாமி, கார்த்திக் நரேன் உள்ளிட்டவர்கள் ஒவ்வொரு எபிசோட்டை இயக்க இருக்கின்றனர். இந்த தொடரின் மூலம் கிடைக்கும் நிதி அனைத்தும் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்குப் பயன்படுத்தப்படும்.

From around the web

Trending Videos

Tamilnadu News