×

பரபரவென வேகமெடுக்கும் மணிரத்னம் - பொன்னியின் செல்வன் முக்கிய அப்டேட்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படம் பிரம்மாண்ட வரலாற்று படமாக உருவாகிவருகிறது. இப்படத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடிக்கும் ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். அதனாலே சினிமா பிரியர்களுக்கு படத்தின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

கல்கி நாவலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் விறு விறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. அதில் ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோரின் காட்சிகளைப் படமாக்கினார் மணிரத்னம். அங்கு படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தனர்.  ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு அறிவித்ததால் படத்தில் வேலைகள் தொடரமுடியவில்லை. எனவே, இதையடுத்து தேதி குறிப்பிடாமல் படவேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது இப்படத்தின் பட வேலைகள் வேகம் பிடித்துள்ளது. ஓய்வு எடுத்தது போதும் இனிமேல் ஓய்வே இல்லை என மணிரத்னம் கூறிவிட்டாராம். எனவே, படப்பிடிப்பு குழு இலங்கை பறந்துள்ளது. அதேப்போல் சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் செட் அமைக்கும் பணிகளும் வேகம் பிடித்துள்ளது. இலங்கையில் படப்பிடிப்பு முடிந்த பின், உடனடியாக சென்னையில் படப்பிடிப்பு துவங்கும் எனத்தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News