Rajini 173: அந்த ஆளு வைலன்ஸை விட்டாத்தான் நல்லா இருப்பான்! ‘ரஜினி 173’ பற்றி பொங்கிய தயாரிப்பாளர்
பிரபல சினிமா தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் ரஜினி 173 பற்றியும் தற்போதுள்ள சினிமா பற்றியும் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். கமலை வைத்து வேட்டையாடு விளையாடு படத்தை தயாரித்தவர்தான் மாணிக்கம் நாராயணன். அஜித்தை வைத்தும் படத்தை எடுத்திருக்கிறார். சமீபகாலமாக அஜித்தை பற்றி கடுமையாக விமர்சித்தவரும் இந்த மாணிக்கம் நாராயணன் தான்.
ஒருமையில் அஜித்தை திட்டி பல சேனல்களில் பேசியுள்ளார். இந்த நிலையில் ரஜினி 173 பற்றி அறிவிப்பு வந்ததும் மிகவும் சந்தோஷப்பட்டதாக மாணிக்கம் நாராயணன் கூறியுள்ளார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு கமல் மீண்டும் ஒரு நல்ல படத்தை கொடுக்கப் போகிறார் என்று இருந்தேன். அதற்குள் இப்படி ஆகிவிட்டதாக மாணிக்கம் நாராயணன் கூறியுள்ளார்.
அதுவும் காமெடியில் சிறந்தவர் சுந்தர் சி. கே.எஸ். ரவிக்குமார், பி. வாசு போன்றவர்களை போல் சொன்ன தேதிக்குள் படத்தை எடுத்து முடிக்க கூடியவரும் சுந்தர் சி. ரஜினி ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல படத்தை கொடுக்கப் போகிறார் என்று மற்றவர்களை போல் நானும் காத்திருந்தேன். ஆனால் ஏன் சுந்தர் சி விலகினார்? அவர்களுக்குள் என்ன நடந்தது என எனக்கும் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.
மேலும் இப்போதுள்ள பிராமினண்ட் இயக்குனர்களில் லோகேஷை சொல்லாம். நல்லாத்தான் படம் எடுக்குறான். ஆனால் வைலன்ஸை விட்டு தொலைக்கணும். அந்தாளு வைலன்ஸை விட்டாத்தான் நல்லா இருப்பான். நல்லதை சொல்லுங்க. இந்த சமுகத்தில் நீங்கள் ஒரு அங்கமாக இருக்கும் போது அவர்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை படத்துல சொல்லுங்கள்,

உங்களை ஃபாலோ பண்ணித்தானே நிறைய பேரு வர்றாங்க. அப்போ எப்படிப்பட்ட படங்களை நீங்கள் கொடுக்க வேண்டும்? என இப்போதுள்ள இயக்குனர்களுக்கு புரியும் விதமாக அந்த வீடியோவில் பேசியுள்ளார் மாணிக்கம் நாராயணன்.
