மணிகண்டன் போலீஸாக நடிக்கும் மக்கள் காவலன் ஃபர்ஸ்ட் லுக்!
Aug 5, 2026, 19:09 IST
'குடும்பஸ்தன்' படத்துக்கு பிறகு மணிகண்டன் அடுத்து என்ன படம் பண்ணப்போகிறார் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்காக இன்று வெளியாகியிருக்கிறது இவரின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக். இந்த படத்துக்கு 'மக்கள் காவலன்' என டைட்டில் வைத்துள்ளனர்.
இதில் மணிகண்டன் போலீஸாக வலம் வரப்போகிறார். இதை அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்குகிறார். இதற்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்து வருகிறார்.
One badge. One man. One battle against power. 👮🏾📷 Here's the First Look of #MakkalKaavalan 📷 👮🏾 pic.twitter.com/FdvmJWr2xA
— Birla Studios (@BirlaStudios) August 5, 2026
இதனை இயக்குநர் பா.இரஞ்சித்தின் 'நீலம் ஸ்டுடியோஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'பிர்லா ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது.
