×

நல்ல வாய்ப்பை மிஸ் செய்த இயக்குனர்.. சூர்யா, விக்ரம் ரெண்டுபேரை இனிமே புடிக்க முடியுமா?...

 
நல்ல வாய்ப்பை மிஸ் செய்த இயக்குனர்.. சூர்யா, விக்ரம் ரெண்டுபேரை இனிமே புடிக்க முடியுமா?...

காக்கா முட்டை திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மணிகண்டன். அதன்பின் விஜய்சேதுபதியை வைத்து ஆண்டன் கட்டளை என்கிற படத்தை இயக்கினார். இப்படமும் வெற்றிப்படமாக மாறியது. தற்போது மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘கடைசி விவசாயி’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

manikandan

இந்நிலையில், விக்ரம் மற்றும் சூர்யா ஆகியோரை இயக்கும் வாய்ப்பை அவர் இழந்தது தெரியவந்துள்ளது. அதாவது, ஆண்டவன் கட்டளையை பார்த்த விக்ரமும், சூர்யாவும் மணிகண்டனை தொடர்பு கொண்டு ‘நாம் இணைந்து ஒரு திரைப்படத்தை செய்வோம்’ எனக் கூறியுள்ளனர். ஆனால், விஜய் சேதுபதியை வைத்து ‘கடைசி விவசாயி’ படத்தை இயக்கி வருவதாகவும், அது முடிந்த பின் பேசுவோம் எனவும் மணிகண்டன் பதில் கூறியுள்ளார்.

kadaisi

கடைசி விவசாயி படம் துவங்கி 3 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இன்னும் திரைப்படம் வெளிவந்த பாடில்லை.  எனவே, விக்ரம் மற்றும் சூர்யா ஆகியோரை இயக்கும் வாய்ப்பு இழந்துவிட்டு தற்போது ‘வட போச்சே’ என ஃபீல் செய்து வருகிறாராம் மணிகண்டன்.

From around the web

Trending Videos

Tamilnadu News