×

3 முறை அபார்ஷன், பொய் புகார்.. அவளை சும்மா விடாதிங்க...அமைச்சர் மனைவி போலீசில் புகார்...

3 முறை அபார்ஷன், நிர்வாண போட்டோக்களை வைத்து மிரட்டுகிறார் மாஜி அமைச்சர்.

 
Tamil-Actress-Chandini-Coexistence-for-five-years-as-far-as

பொய் புகார் கொடுத்து  தங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய நடிகை சாந்தினியை சும்மா விடாதிங்க என அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி வசந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நடிகை சாந்தினி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 28ம் தேதி புகார் அளித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மலேசியாவைச் சேர்ந்த நான், சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பணியாற்றினேன். 2017-ல் அதிமுக ஆட்சியில் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனை அவரின் அமைச்சர் பங்களாவில் சந்தித்தேன். அது பிசினஸ் தொடர்பாக பேச என்று சொன்னதால் சென்றேன். அது நட்பாக மாறி பின்னர் உறவானது.

எனக்கு வீட்டில் பிரச்சனை இருக்கிறது, மனைவி சரியில்லை என்றார். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். நானும் சரி என்றேன். அந்த அமைச்சர் பங்களாவுக்கு தான் சென்று கொண்டிருந்தேன். அதன் பிறகு பெசன்ட் நகரில் வசிக்கிறோம்.

இந்த 5 ஆண்டுகளில் நிறைய போராட்டங்கள். என்னை நிறைய அடிச்சிருக்கிறார். நான் கர்ப்பமானேன். அது குறித்து கேட்டதற்கு, சட்டப்படி திருமணம் செய்தால் தான் நீ குழந்தை பெற முடியும் என்று சொல்லி அவரின் நண்பரான டாக்டர் அருண் மூலம் கருவை கலைக்க வைத்தார். இது இரண்டு, மூன்று தடவை நடந்திருக்கிறது. நான் ஒரு முறை அமைச்சர் பங்களா முன்பு பெட்ரோல் எல்லாம் ஊத்திக் கொண்டேன்.

3 முறை அபார்ஷன், நிர்வாண போட்டோக்களை வைத்து மிரட்டுகிறார் மாஜி அமைச்சர். என்னை மிரட்டத் துவங்கினார். என் பெற்றோரை மிரட்டினார். ராமநாதபுரத்தில் ரூ. 1 லட்சம் கொடுத்தால் உன்னை கொல்ல ஆட்கள் வருவார்கள் என்றார். எனக்கு தெரியாமல் எடுத்த புகைப்படங்களை வைத்து மிரட்டுகிறார்.

அவரை விட்டு விலக முடிவு செய்தேன். நான் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களை வைத்து மிரட்டத் துவங்கினார். எனக்கென்று ஒரு லைஃப் வேண்டும். அதனால் என் வழக்கறிஞரை தொடர்பு கொண்டேன். அதன் பிறகே காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளேன் என்றார்.

பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சாந்தினி யார் என்றே தெரியாது என்று மணிகண்டன் செய்தியாளர்களிடம் தெரிவத்தார்.

இந்நிலையில் மணிகண்டனின் மனைவி வசந்தி ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கை சந்தித்து சாந்தினி மீது புகார் அளித்துள்ளார். அவர் தன் புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

நடிகை சாந்தினி என் கணவர் மீது பொய் புகார் அளித்துள்ளார். அவர் பொய்யான தகவலை பரப்பி எங்கள் குடும்பத்திற்கு அவமரியாதையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

வசந்தியின் புகாரை அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News