Categories: Cinema News latest news

எங்க வண்டிய திருடிட்டாங்க., பார்த்த சொல்லுங்க.! விரக்தியில் மணிமேகலை.! ஆறுதல் கூறும் CWC நண்பர்கள்.!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமாக இருக்கிறார் தொகுப்பாளினி மணிமேகலை. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னை திட்டுவார்கள், அடிப்பார்கள், கரிந்து கொட்டுவார்கள். ஆனாலும், எப்போதும் சிரித்த முகத்துடன் அந்த வலிகளை தாங்கி மக்களை சிரிக்க வைப்பார் மணிமேகலை.

அதன் காரணமாகத்தான் தொடர்ந்து மூன்று சீசன்களாக நிலைத்து நிற்கும் கோமாளிகள் ,மத்தியில் இவரும் தனித்து நிற்கிறார். இவர் முதலில் தொகுப்பாளினியாக தொலைக்காட்சிகளில் அறிமுகமாகி அதன் பின்னர் உசேன் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின்னர் சம்பாதித்து ஓர் இருசக்கர வாகனத்தை வாங்கினார். அந்த வாகனம் தற்போது திருடு போயுள்ளது. இதனை மணிமேகலை மிகவும் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். அந்த பைக் KTM200, அந்த வண்டி எண் TN 10 BJ4700.

இதையும் படியுங்களேன் – தைரியம் இருந்த விஜயை ‘அப்படி’ செய்ய சொல்லுங்க.! சவால் விட்ட அஜித்.!

இந்த வண்டியை சில நாட்களுக்கு முன்னர் அசோக் நகரில் உள்ள நண்பர் வீட்டிற்கு எடுத்துச்சென்றுள்ளனர்.  நண்பர் வீட்டிற்கு அவர்கள் உள்ளே சென்றுள்ளனர்.  பிறகு வெளியே வந்து பார்க்கும்போது அந்த வண்டி காணவில்லை. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மணிமேகலை. இதற்கு ஆதரவாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள நடிகை ஷுருதிகா  இணையத்தில் ஆறுதல் கூறியுள்ளார்.

Manikandan
Published by
Manikandan