Categories: Cinema News latest news

மணிமேகலை வெளியேறியதற்கு இதுதான் காரணமா?… விஜய் டிவி இப்படி ஒரு டிவிஸ்ட் வச்சிருக்காங்களே!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கிடைத்து வரும் அமோக ஆதரவை குறித்து தனியாக கூறத்தேவையில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசன் தொடங்கியது. அந்த முதல் சீசனுக்கே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்று கூட புகழ்ந்தார்கள்.

அதனை தொடர்ந்து குக் வித் கோமாளியின் 2,3 ஆகிய சீசன்களும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஏற்கனவே மிகப் பிரபலமான கோமாளிகளாக இருந்த புகழ், சுனிதா, குரைஷி ஆகியோர் கோமாளிகளாக வருகின்றனர். இவர்களுடன் மோனிஷா, ரவீனா, ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன் ஆகியோரும் கோமாளிகளாக வருகின்றனர்.

கடந்த மூன்று சீசன்களாக மிகவும் பிரபலமான கோமாளியாக வலம் வந்த மணிமேகலை, நான்காவது சீசனின் தொடக்கத்தில் 4 வாரங்கள் மட்டுமே கலந்துகொண்டார். அதன் பின் திடீரென இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு இணையத்தில் பல செய்திகள் உலா வந்தன. அதாவது கடந்த மூன்று சீசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி, குக் ஆக மாறியது மணிமேகலையின் ஈகோவை தொட்டுவிட்டது என வதந்திகளை பரப்பினார்கள். மேலும் மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறார், ஆதலால்தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார் என்றும் கூறினார்கள்.

இந்த நிலையில் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கான உண்மை காரணம் குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

மணிமேகலை பல வருடங்களுக்கு முன்பு சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தார். அப்போதே அவர் மிகவும் பிரபலமாக ஆகிவிட்டார். அதன் பின் கடந்த 2017 ஆம் ஆண்டு ஹுசைன் என்ற டான்சரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அதனை தொடர்ந்துதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொள்ளத் தொடங்கினார். எனினும் மணிமேகலைக்கு மீண்டும் தொகுப்பாளினியாக பணியாற்ற வேண்டும் என்ற ஆசையே இருந்து வந்தது. இந்த ஆசையை பல முறை வெளிப்படுத்தியிருக்கிறார் மணிமேகலை. இந்த நிலையில் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ஒரு புதிய நிகழ்ச்சியில் மணிமேகலை தொகுப்பாளினியாக பணியாற்றவுள்ளாராம். ஆதலால்தான் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாராம். இவ்வாறு ஒரு புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: காஷ்மீர் குளிரில் விஜய் செய்த காரியம்… அரக்க பறக்க ஓடி வந்த படக்குழுவினர்… என்ன நடந்தது தெரியுமா?

Arun Prasad
Published by
Arun Prasad