லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இப்படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, நயன்தாரா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு,
சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயரம், லால், ரஹ்மான் ஆகியோர் நடித்துள்ள்னர். இப்படம் பாகுபலி போல் 2 பாகங்களாக தயாராகி வருகிறது. இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது.
எழுத்தாளர் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, ஐதராபாத், மத்திய பிரதேசத்தில் உள்ள ஆர்ச்சா நகர், குவாலியர் கோட்டை என இந்தியாவில் பல இடங்களில் நடந்து சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது எடிட்டிங் பணி நடந்து வருகிறது.
இப்படத்திற்காக இப்படத்தில் நடிக்கும் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி உள்ளிட்ட முக்கிய நடிகர்களை முடி வளர்க்க சொல்லியிருந்தார் மணிரத்னம். அவர்களும் மாதக்கணக்கில் முடி வளர்த்து நடித்தனர். நான் கூறும் வரை முடியை வெட்ட வேண்டாம் என மணிரத்னம் கூறியிருந்தாராம். ஏனெனில், தேவைப்பட்டால் மீண்டும் சில காட்சிகளை எடுக்க வேண்டும் என்பதற்காக அப்படி கூறியிருந்ததாக தெரிகிறது.
எனவே, யாரும் முடியை வெட்டவே இல்லை. ஆனால், தனக்கான படப்பிடிப்பு முடிந்தவுடன் முடிவை வெட்டி விட்டாராம் ஜெயம்ர வி. இதனால் கடுப்பான மணிரத்னம் ‘நீயெல்லாம் ஒரு தொழில்முறை நடிகனே இல்லை’ என வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டாராம்.
பொதுவாக மணிரத்னம் அவ்வளவு கோபப்படும் இயக்குனர் இல்லை. ஆனால், அவரையே கோபப்படுத்திவிட்டார் ஜெயம்ரவி…
Cook with…
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…
சிம்புவுடன் இணைந்த…