×

மணிரத்னம்கிட்ட ராஜமவுலி பிச்சை வாங்கணும்... ஷாக் கொடுக்கும் பொன்னியின் செல்வன் அப்டேட்.....

 
மணிரத்னம்கிட்ட ராஜமவுலி பிச்சை வாங்கணும்... ஷாக் கொடுக்கும் பொன்னியின் செல்வன் அப்டேட்.....

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க பல வருடங்களாக ஆசைப்பட்ட இயக்குனர் மணிரத்தினத்திற்கு கடந்த வருடம்தான் காலம் கை கூடி வந்தது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, சூர்யா, விக்ரம் பிரபு, சரத்குமார், ரகுமான், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், நயன்தாரா என பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.

இவ்வளவு பேரிடம் கால்ஷிட் வாங்கி படப்பிடிப்பை சரியாக திட்டமிட்டு நடத்துவது சாதாரண விஷயம் அல்ல.  ஆனால், மணிரத்னம் அதை சரியாக கையாண்டார். அந்நிலையில்தான், கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் 6 மாதங்கள் நிறுத்தப்பட்டது. அதன்பின் 4 மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. 

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு 2 கட்டங்கள் முடிவடைந்துள்ளது. இப்படம் பாகுபலி திரைப்படம் போல் 2 பாகமாக வெளிவரவுள்ளது. எனவே, 2 பாகத்தின் படப்பிடிப்பையும் மணிரத்னம் ஒரே நேரத்தில் நடத்தி வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்புகள் 190 நாட்கள் என திட்டமிட்டு அதில் 120 நாட்கள் முடிந்துவிட்டது.   அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்கவுள்ளது. தொடர்ச்சியாக 70 நாட்களில் 2 படப்பிடிப்பை முழுமையாக முடித்திவிட்ட மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

இதில் ஆச்சர்யம் என்னவெனில், பாகுபலி 2 பாகங்களை எடுத்த இயக்குனர் எஸ்.ராஜமவுலி அதற்காக 520 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார். ஆனால், மணிரத்னமோ 190 நாட்களில் முடிக்கவுள்ளார். 

படம் வெளியான பின்னரே பொன்னியில் செல்வன் பாகுபலியை தாண்டி சாதனை செய்யுமா?, பாராட்டை பெறுமா என்பது தெரியவரும்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News