தமிழ் திரையுலகில் மணிரத்னம் படம் எடுக்கிறார் எனில் அப்படத்தின் கதை எதை அடிப்படையாக கொண்டது. அதில் யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழும். மாதவன், அரவிந்தசாமி போன்ற பல நடிகர்களை அவர் அறிமுகம் செய்துள்ளார்.
தற்போது அவர் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட செலவில் உருவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனமும், மணிரத்னத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் பாகுபலி போல 2 பாகங்களாக தயாராகி வருகிறது. முதல் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், மணிரத்னம் தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். சிறிய பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் ஹீரோவாக அவர் யாரை நடிக்க வைக்கிறார் என தெரிந்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்..
பின்னணி பாடகர் சித் ஸ்ரீராமைத்தான் அவர் ஹீரோவாக நடிக்க வைக்கவுள்ளாராம். இவர் விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற ‘கண்ணான கண்னே’, பிசாசு படத்தில் இடம் பெற்ற ‘உன்ன நினைச்சு’ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியவர்.
அது என்னவோ அவரை ஒரு ஹீரோவாக மணிரத்தினம் பார்க்கிறார் போல…
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…