Categories: Cinema News latest news

மணிரத்னம் செய்யத் தவறிய ஒரு விஷயம்…! எப்படி மறந்தாரு…? கோடம்பாக்கத்தில் வைரலாகும் செய்தி…

மணிரத்னம் இயக்கத்தில் வருகிற 30 ஆம் தேதி திரைக்கு வர காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், உட்பட பல பிரபலங்கள் நடித்து வெளியாகும் படம் என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும் படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் பிரபலங்களுடன் இயக்குனர் மணிரத்னம் உட்பட அனைவரும் மும்முரமாக இருக்கின்றனர். சென்னை, ஐதராபாத், என பல ஊர்களுக்கு சென்று புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்கள் : சிபி சக்ரவர்த்திக்கு ஆப்பு வைத்த ரஜினிகாந்த்… என்னப்பா திடீர் ட்விட்ஸ்டா?

மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கலையுலக நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து விழாவை சிறப்பித்தனர். இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் கமல் மற்றும் ரஜினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.இந்த படம் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து எடுக்க ஆசைப்பட்ட படம்.

மேலும் ரசிகர்கள் முதல் சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் வரை அனைவராலும் அறியப்பட்ட காப்பியம். மேலும் அனைவர் மனதிலும் நின்று பேசும் காப்பியம். இப்போது இது மணிரத்னம் மூலம் நனவாகியிருக்கிறது. இந்த நிலையில் ஏன் மணிரத்னம் இந்த காப்பியத்தின் தலைவனான கல்கிக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுக்க வில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழத்தொடங்கியிருக்கிறது. அதாவது கல்கியின் குடும்பத்தாருக்கு மரியாதை செய்யும் விதமாக பொன்னியின் செல்வன் பட சம்பந்தமாக எத்தனையோ விழாக்கள் நடைபெற்றது. அதில் எதாவது ஒரு விழாவிலாவது அவரது குடும்பத்தாரை அழைத்து பெருமை படுத்தியிருக்கலாமே என்று ரசிகர்கள் எண்ணுகின்றனர். இனிமேலாவது பண்ணுவாரா என்று பார்ப்போம்…!

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini