ஷூட்டிங்கே துவங்கல... இப்பவே விஜய் சேதுபதி - மணிரத்னம் படத்தை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா நெட்ஃப்ளிக்ஸ்?

 
Vijay sethupathi maniratnam netflix

கோலிவுட்டில் தனக்கென ஒரு ஃபிலிம்மேக்கிங் ஸ்டைலை வைத்திருப்பவர் இயக்குநர் மணிரத்னம். இவர் இயக்கிய 'செக்கச்சிவந்த வானம்' படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி போலீஸ் ரோலில் நடித்திருந்தார்.

இவர்களது காம்பினேஷனில் புதிய படம் உருவாகுகிறது. இதை சுபாஸ்கரனின் 'லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'மெட்ராஸ் டாக்கீஸ்' மூலம் தயாரிக்கிறார்.

ஹீரோயினாக சாய் பல்லவி நடிக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பை வருகிற ஜூலை 5-ஆம் தேதி தான் துவங்கவுள்ளனர்.

அதற்குள் இதன் OTT ரைட்ஸை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். அதுவும் ரூ.20 கோடிக்கு என்று கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது.

From Around the web