Categories: Cinema News latest news throwback stories

சூப்பர்ஹிட் பாடலுக்கு நோ சொன்ன இயக்குனர்… விடாப்பிடியாக இருந்து சாதித்த ரஜினிகாந்த்…

Rajinikanth: பொதுவாக கதைகளில் வரும் மாற்றத்தினை ரஜினிகாந்த் கண்டுக்கவே மாட்டார். அது இயக்குனர்களின் வேலை என விட்டுவிடுவார். ஆனால் ரஜினியே அடம் பிடித்து ஒரு பாடலை கேட்டு வாங்கிய ஆச்சரிய சம்பவமும் நடந்து இருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் மனிதன். இப்படத்தில் முதலில் மனிதன், மனிதன்… எவன்தான் மனிதன் பாடல் இடம் பெறுவதாக இல்லை. அதாவது, படத்தின் கதை எழுதிய பஞ்சு அருணாசலம் டைட்டில் வந்த அடுத்த சில நிமிடத்தில் வானத்தை பார்த்தேன் பாடல் வருகிறது.

இதையும் படிங்க: லால்சலாமில் முதல் பாதி சரியில்லை தான்… டைரக்டராக நான் செஞ்சது தப்பு… ஓபனா சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…

இதனால் ரசிகர்களுக்கு கடுப்பாகும். இதனால் டைட்டில் பாடலாக வரும் மனிதன் மனிதனை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். இதைத் கேள்விப்பட்ட இசை அமைப்பாளர் சந்திரபோஸ் ஏவிஎம் சரவணனிடம் இந்தப் பாடல் பெரிய ரீச் பெறும். இது படத்தில் வரவில்லை என்றால் கூட பரவாயில்லை.

படத்தின் கேசட்டிலாவது சேர்த்து கொள்ள வேண்டும் எனக் கேட்டு இருக்கிறார். தான் இசையமைத்த பாடல்களிலேயே இது எனக்கு ஆத்ம திருப்தியளித்தது. வெறும் பாடலுக்கு அதிக செலவு இருக்காது எனவும் கூறினாராம். இதனால் ஏவிஎம் சரவணனும் ஓகே எனச் சொல்லிவிட்டாராம். பாடல் ஒலிப்பதிவு முடிந்த பின்னர் எஸ்.பி.முத்துராமன் யூனிட்டில் இருந்தவர்கள் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்து இருக்கிறார்கள். 

இதையும் படிங்க: எத்தனை ஹீரோக்கள் நடிக்க வேண்டிய படம் தெரியுமா? ஆனால் சொன்ன காரணம்.. அதான் லேடி சூப்பர் ஸ்டார்

அந்த நேரம் தற்செயலாக ஏவி.எம். பக்கம் வந்த ரஜினி, அந்த அறைக்குள் நுழைந்தாராம். ஒடிக் கொண்டிருந்த பாடலைக் கேட்டு அசந்துவிட்டாராம். இந்த பாடல் மனிதன் படத்தில் வருகிறதா எனக் கேட்க சரவணன் இல்லை என்றாராம். ஆனால் ரஜினிக்கு அந்த பாடல் ரொம்ப பிடித்து விட்டதாம்.

என்ன செய்வீங்க, ஏது செய்வீங்கனு தெரியாது. ‘மனிதன் மனிதன்’ பாடல் படத்தில் வந்து தான் ஆக வேண்டும் என ரஜினி அடம் பிடித்தாராம். அவர் வைத்த கோரிக்கையை அடுத்து தான் மனிதன் படத்தில் மனிதன் மனிதன் பாடல் இடம் பெற்றதாம்.

Published by
Shamily