Connect with us
மணிவண்ணன்

Cinema News

மணிவண்ணன் நல்ல அறிவாளி.. என்ன வாயை திறந்தாலே பொய் தான்… அதிகமாக விமர்சித்த பாரதிராஜா…

தமிழ் சினிமாவில் மணிவண்ணனை பாரதிராஜா தான் அறிமுகப்படுத்தினார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மன கசப்பில் மிகப்பெரிய பிளவினை சந்தித்தனர். இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதும் நடந்தது.

அக்கவுன்ட் செக்ஷன்ல வேலை பார்த்துக்கொண்டிருந்த மணிவண்ணனுக்கு பாரதிராஜா அறிமுகமானார். அதை தொடர்ந்து, ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் மணிவண்ணன் வேலை செய்தார். அவர் மீது நம்பிக்கை வைத்த பாரதிராஜா ‘நிழல்கள்’ படத்துல வசனம் எழுதும் பொறுப்பை அவருக்கு கொடுத்து, நடிக்கவும் வெச்சார்.

மணிவண்ணன்

மணிவண்ணன்

அதுமட்டுமல்லாமல், தனக்கு தெரிந்த பெண்ணை மணிவண்ணன் காதலித்து இருக்கிறார். இவர்கள் திருமணத்தினை தனது செலவில் செய்தாராம் பாரதிராஜா. இதை தொடர்ந்து, பாரதிராஜாவிடம் சொல்லாமலே தனியாக டைரக்டராகும் பணியில் இறங்கி இருக்கிறார் மணிவண்ணன்.

மணிவண்ணன்

மணிவண்ணன்

இதை தொடர்ந்து, இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டதாம். இதுகுறித்து பாரதிராஜாவிடம் கேட்கப்பட்ட போது மணிவண்ணன் நல்ல அறிவாளி தான்.. என்ன வாயை திறந்தாலே பொய் தான் என விமர்சித்தார். தொடர்ந்து, வீதியில் இருந்த அவரை அரண்மனை என்னும் சினிமாவிற்கு அழைத்து வந்ததும் தன் தவறு என ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் பாரதிராஜா.

Continue Reading

More in Cinema News

To Top