Categories: Cinema News latest news

ஆம் பிரபுதேவாவை நான் காதலிக்கிறேன்… மனம் திறந்த தனுஷ் பட நடிகை….!

திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல பரிமாணங்களில் வலம் வரும் நடிகர் பிரபுதேவாவின் நடனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரை தென்னிந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என கூறும் அளவிற்கு நடனத்திற்கு பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரபுதேவாவை நான் காதலிக்கிறேன் என பிரபல நடிகை ஒருவர் வெளிப்படையாக கூறியுள்ளார். தற்போது ஆயிஷா என்ற படத்திற்காக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியருக்கு நடனம் கற்றுக் கொடுக்க பிரபுதேவா ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்றுள்ளார். அங்கு இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள நடிகை மஞ்சுவாரியர் கூறியிருப்பதாவது, “நான் நேசிக்கும் மிகப் பெரிய நட்சத்திரம் பிரபுதேவா. நான் லாலேட்டன், மம்முட்டி, ஷோபனா சேச்சி ஆகியோரின் ரசிகை தான். ஆனால், என்னுடைய இளம் வயதில் நான் ஒருவருக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தேன் என்றால் அது பிரபுதேவாவுக்கு தான்.

பிரபுதேவா மீது எனக்கு காதல் இருப்பது என்னை தனிப்பட்ட முறையில் அறிந்த அனைவருக்கும் தெரியும். அந்த காதல் அன்றும் இன்றும் இருக்கிறது” என பிரபுதேவா மீதான தன் காதலை நடிகை மஞ்சுவாரியர் மிகவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

மஞ்சு வாரியார் தற்போது அவரது கணவர் திலீப்பை பிரிந்து தனியாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் இப்படி கூறியுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பிரபு தேவா தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini