Categories: Cinema News latest news

மங்காத்தா 2 டிராப் ஆனதுக்கு இதுதான் காரணமா? என்ன இருந்தாலும் அஜித்  இப்படியா பண்றது?

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் 50 ஆவது படமாக வெளிவந்த “மங்காத்தா” திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்தது. இத்திரைப்படம், அஜித்தின் கெரியரில் வித்தியாசமான திரைப்படமாகவும் அமைந்தது. இதில் அஜித்குமார் முழுக்க முழுக்க நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பு மிகவும் அசத்தலாக இருந்தது.

Mankatha

இந்த நிலையில் “மங்காத்தா” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுக்கள் சமீபத்தில் அடிபட்டு வந்தன. விரைவில் “மங்காத்தா 2” குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் அது குறித்து ஒரு கொசுறு செய்தி கூட வெளிவரவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, “மங்காத்தா 2” திரைப்படம் டிராப் ஆனது குறித்து ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Venkat Prabhu

அதாவது வெங்கட் பிரபு எப்போதும் லூஸ் டாக் விடக்கூடியவராம். “தளபதி 68” படம் குறித்த தகவல்கள் கூட தற்போது தினமும் கசிந்து வருகிறது. இதனால் விஜய் கூட கோபமாக இருக்கிறாராம். வெங்கட்  பிரபுவின் இந்த சுபாவத்தால் அஜித்தும் படுபயங்கரமாக கோபத்தில் இருக்கிறாராம்.

“ஏகே 62” திரைப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறிய பிறகு வெங்கட் பிரபு-அஜித் கூட்டணியை வைத்து “மங்காத்தா 2” திரைப்படத்தை உருவாக்கலாம் என தயாரிப்பு நிறுவனம் கூறியதாம். அதற்கு அஜித்குமார் மறுப்பு தெரிவித்துவிட்டாராம். இவ்வாறு வெங்கட் பிரபுவின் சுபாவம்தான் “மங்காத்தா 2” டிராப் ஆனதற்கு காரணம் என ஒரு தகவலை அப்பேட்டியில் செய்யாறு பாலு பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதையும் படிங்க: லூஸ்டாக்கில் வாய்விட்ட வெங்கட் பிரபு ; கடுப்பாகி விஜய் செய்த காரியம்: இதெல்லாம் தேவையா?!..

Arun Prasad
Published by
Arun Prasad