Connect with us

Cinema News

சொந்த ஜாதியை எதிர்த்து இப்படி ஒரு புரட்சி செய்திருக்கிறாரா மனோபாலா?… இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்த மனோபாலா, கடந்த 3 ஆம் தேதி கல்லீரல் பிரச்சனையின் காரணமாக உயிரிழந்தார். திரைத்துறையைச் சேர்ந்த பலரும் மனோபாலாவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இரண்டு நாட்கள் ஆகியும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மனோபாலா இறப்பின் தாக்கம் அவர்களை விட்டு மீளவில்லை. அந்தளவுக்கு மனோபாலா தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவராக திகழ்ந்துள்ளார்.

மனோபாலா ஒரு நடிகர் என்றுதான் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் மனோபாலா தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை இயக்கியவர் என்ற விஷயம் மிகச்சிலருக்கே தெரிந்திருக்கும். “பிள்ளை நிலா”, “சிறைப்பறவை”, ஊர்க்காவலன்”, “என் புருஷன்தான் எனக்கு மட்டுந்தான்”, “மல்லு வேட்டி மைனர்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் மனோபாலா. தமிழ் மட்டுமல்லாது, “டிசம்பர் 31” என்ற கன்னட திரைப்படத்தையும், “மேரா பதி சர்ஃப் மேரா ஹை” என்ற ஹிந்தி திரைப்படத்தையும் மனோபாலா இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் மனோபாலா தனது சொந்த ஜாதியை எதிர்த்து ஒரு பகுத்தறிவு புரட்சியையே செய்திருக்கிறார். ஆம்!

மனோபாலா ஒரு ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவர். சினிமா ஆசையில் தனது வீட்டை விட்டு ஓடி வந்து பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தவர். தனது இளம் வயதில் தந்தை பெரியாரின் கருத்துக்கள் மீது தீவிர ஈடுபாடு உடையவராக திகழ்ந்த மனோபாலா, தனது பூணூலையே அறுத்து எறிந்திருக்கிறார். மேலும் அக்காலகட்டத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாதவராகவும் இருந்திருக்கிறார். ஆனால் தனது கடைசி காலகட்டத்தில் அவரது உடல் நிலை சற்று மோசமாக இருந்தது. அந்த சமயத்தில் மிகத் தீவிரமான ஆன்மீகவாதியாக மாறியிருக்கிறார் மனோபாலா.

இதையும் படிங்க: ‘லியோ’ படத்துல இத்தனை சிறப்பு இருக்கா?.. த்ரிஷா பிறந்த நாளின் போது சர்ப்ரைஸை அவிழ்த்துவிட்ட படக்குழு..

author avatar
Arun Prasad
Continue Reading

More in Cinema News

To Top